அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணைய தளங்களில் ஊடுருவி கிரெடிட் கார்ட் தகவல்களை களவாடி 16.9 கோடி டாலர்கள் இழப்பு உண்டாக்கிய ரஷிய நாட்டு பாராளுமன்ற எம்.பி.யின் மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோமன் செலெஸ்னேவ்(32). ரஷிய பாராளுமன்ற உறுப்பினர் வலேரி செலெஸ்னேவ் என்பவரின் மகனான இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு நாட்டுக்கு சென்றிருந்தபோது திடீரென்று மாயமானார். அவர் அமெரிக்க உளவுத்துறையினரால் கடத்தப்பட்டது […]
Author: குமார்
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு – டி.டி.வி.தினகரன் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம்
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் […]
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை […]
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் – புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான […]
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 28-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என அன்பழகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக் கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக […]
அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி வரும் திங்கட்கிழமை பேச்சு தொடக்கம்
அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு அணி குழுவினரும் வருகிற 24-ந்தேதி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓ.பி.எஸ். அணியில் கே.பி. முனுசாமி […]
உலகின் வயதான பெண்மணி ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் நீண்ட ஆயுள் ரகசியம்
உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் பெற்றுள்ளார். ஜமைக்காவின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் வைலட் பிரவுன் (117), இவர் தான் தற்போது உலகிலேயே வயதான பெண் ஆவார். வைலட் கடந்த 1900 ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தான் இவர் தனது 117வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். பிரவுன் தனது 97 வயதான மகனுடன் தற்போது […]
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கு தனிப்பெயரை அறிவித்து மீண்டும் சீனா அடாவடி நடவடிக்கை
அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லமா அண்மையில் அருணாச்சல பிரதேசம் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா தலாய்லாமா பயணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனால், இந்தியா மீது சீனா கடும் […]
பெரா வழக்கு: தீர்ப்பை திரும்ப பெறக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனு வாபஸ்
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை டி.டி.வி.தினகரன் வாபஸ் பெற்றுள்ளார். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் சார்பில் […]





