Author: குமார்

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை – புதிய சமரச திட்டம் தயாராகிறது

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச திட்டம் தயாரிக்கப்படுகிறது. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி பழனிசாமி அணி அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். இதை தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக […]

திபெத்திய புத்தமதத் துறவியொருவர் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார்

திபெத்திய புத்தமதத் துறவியொருவர் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார். இச் செய்தியை திபெத்தில் பணியாற்றும் கண்காணிப்புக் குழுவும், அமெரிக்க அரசு ஆதரவு பெற்ற வானொலியும் வெளியிட்டுள்ளன. அடையாளம் தெரியாத அந்த புத்தபிட்சு மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் கன்சி எனுமிடத்திலுள்ள பொதுச் சதுக்கத்தில் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீ அணைக்கப்பட்டு பிட்சுவை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். பிட்சு உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அப்பிரதேசத்தின் தன்னாட்சி அரசு […]

வடகொரியா சவால்: அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார்

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா. […]

சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள்

சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய ஈஸ்டர் தின உரையில், அண்மையில் சிரியாவில் விஷ வாயு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது […]

டொனால்டு டிரம்ப் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி அமெரிக்காவில் 150 இடங்களில் பேரணி

அமெரிக்காவில் ஜனாதிபதி வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி 150 இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகள் நடத்தினர். அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதைப் பின்பற்றி, தனது வருமான வரி கணக்கை வெளியிட முடியாது என ஜனாதிபதி தேர்தலின்போது குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் கூறி விட்டார். இது அங்கு பெரும் […]

சீனாவில் பேருந்து விபத்து: 10 பேர் பலி, 4 பேர் மாயம்

சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள கையாங் மாகாணத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் பலியாகினர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிஷோவு மாகாணத்தில் உள்ள கையாங்கில் இருந்து வெங்கான் பகுதிக்கு 19 பேர் அமரக்கூடிய மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்று மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் 10 பயணிகள் பலியாகினர். 5 பேர் […]

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக டெல்லி வந்தார்

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கத்தில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார். நேபாள நாட்டின் புதிய அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற பித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், அந்நாட்டு மந்திரிசபையின் ஒப்புதல் கிடைக்காததாக் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக […]

விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறை – ஏர்இந்தியா

விமானத்தில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏர்இந்தியா புதிய விதிமுறைகளை கொண்டு உள்ளது. விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறைகளை கொண்டு வந்து உள்ள ஏர்இந்தியா, இதுபோன்ற பயணிகளுக்கு அபராதம் விதிக்க மற்றும் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது. விமானங்களில் பயணிகள் பயணிக்க தடைசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் விமான காலதாமதத்திற்கு பயணிகளுக்கு அபராதம் விதிக்க ஏர் இந்தியா முடிவு செய்து உள்ளது. […]

கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி

கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் பிகே குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார். கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த அகமது மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71.33 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முஸ்லீம் லீக் வேட்பாளரான […]

பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை – முலாயம்சிங் யாதவ்

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி, காங்கரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் சரிவை சந்தித்தது. ஆனாலும் சமாஜ்வாடி, பகுஜன் […]