மசிடோனியா நாட்டில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடான மசிடோனியாவில் அல்பேனியன் நாடு உருவானத்தில் இருந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் நிகோலா குருவ்ர்கியின் வி.எம்.ஆர்.ஓ. கட்சி, ஆட்சி முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோசியல் ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன்ஷயீவ் அல்பேனியா ஆதரவு பெற்ற கட்சியுடன் இணைந்து புதிய அரசு அமைக்க முயன்று […]
Author: குமார்
சந்திரனில் கிராமம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டால் அங்கு சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு – ஐரோப்பிய விண்வெளி கழகம் திட்டம்
சந்திரனில் கிராமம் அமைக்கும் முயற்சியில் சீனாவும் ஈடுபட்டால் அங்கு சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என ஐரோப்பிய விண்வெளி கழகம் கருதுகிறது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் 22 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இக்கழகம் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த மிட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து சீனாவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. […]
அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது, நாம் தனித்தே செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.செம்மலை தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் எம்.பி. […]
சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து
சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு செயல்படுகிறது. சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபித்த சசிகலாவின் ஆதரவு அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் […]
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு அறிவாலயம் வந்தார். அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் […]
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினராக கலைஞர் 60 ஆண்டுகள் பணியாற்றியதையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக […]
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை – கேரளாவில் ஒருவர் கைது
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந்தேதி நடந்த கொலை- கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டிற் குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூரை படுகொலை செய்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் ஜெயலலிதாவின் அறைக்குள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து […]
சிரியா-ஈராக்கில் குர்து பகுதியில் துருக்கி குண்டுவீச்சு: 23 பேர் பலி
சிரியா, மற்றும் ஈராக்கில் உள்ள குர்து பகுதிகள் மீது நேற்று துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தினார்கள். இதில் குர்து இனத்தை சேர்ந்த 23 பேர் பலியாயினர். ஈராக் மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் குர்து இனத்தவர் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில் குர்து இன மக்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆதரவுடன் அமெரிக்காவும், ரஷியாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். ஆனால் குர்து […]
அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா வருகை: வடகொரியா ராணுவ பயிற்சியால் போர் பதட்டம்
அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தென் கொரியா வருகையாலும், வட கொரியா ராணுவ பயிற்சியாலும் கொரிய தீபகற்பத்தில் போர்பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது […]
வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம்
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச […]





