Author: குமார்

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் – டி.டி.வி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் […]

டி.டி.வி. தினகரன் கைதை தொடர்ந்து மேலும் பல பெரிய தவறுகள் வெளிவரும் – மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்தனர். கைதை தொடர்ந்து மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அது தான் உச்சம் என்று சொல்ல முடியாது. மேலும் இது […]

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி – கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் – மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயப் பெருங்குடி மக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மூலம் தி.மு.க. முன்னெடுத்த முழு அடைப்புப் […]

குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் 64 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 17 இளநிலைப் பொறியாளர்களை தேர்வு செய்யும் பணி அண்ணா பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம், கடந்த 29.01.2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் 1:5 […]

சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் – கே.பி.முனுசாமி

சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் உருவாகியுள்ளதால் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் தொடங்குகிறது. இதில் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அணி சார்பில் தலா 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பேசுகிறார்கள். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று தொடங்குவதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் இன்று காலை ஆலோசனை நடத்தினார்கள். கிரீன்வேஸ் சாலையில் […]

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் […]

அ.தி.மு.க.வில் இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை

அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது. ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று […]

இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்: ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்து பேசினாராம்

டெல்லியில் நடைபெற்ற விசாரணையின்போது, இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை ஒத்துக்கொண்ட டி.டி.வி.தினகரன், ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசியதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற […]

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டியதாக கட்சியில் இருந்து ஆறாண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்ட பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லி பிராந்தியத்துக்கான காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மற்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் அஜய் மக்கான் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி இருந்தார். ராகுல் காந்தி […]

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார். […]