Author: குமார்

விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம்: தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஒரு நாள் இடர்பாடுகளை பொறுத்துக்கொண்டு விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆட்சியிலிருந்தாலும் மக்களின் நலனைப் புறக்கணிக்கும் முதல்வரும் அமைச்சர்களும் உள்ள மாநிலத்தில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது. வறட்சியாலும் கடன் தொல்லைகளாலும் வாழ்வுரிமை இழந்து, தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் உள்ளாகி வரும் […]

தமிழகத்தில் 25-ந்தேதி கடையடைப்பு – பஸ், ஆட்டோக்கள் ஓடாது – தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு

தமிழகத்தில் 25-ந்தேதி பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை தி.மு.க ஒருங்கிணைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க பிற கட்சிகள் பங்கேற்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் […]

தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு

தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. சசிகலா சிறைதண்டனைக்கு பிறகு துணை பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் கட்சி பணியை கவனித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்.கே.நகர் […]

தினகரனிடம் இரட்டை இலை லஞ்சம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னை வருகை

தினகரனிடம் விசாரணை நடத்த நாளை டெல்லி போலீசார் சென்னை வருகிறார்கள்.ஏசிபி சஞ்சய் ராவத் போலீஸ் அதிகாரி தலைமையில், விசாரணை நடைபெறுகிறது ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. அ.தி.மு.க. அம்மா அணி என்று சசிகலா தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சமீபத்தில் […]

தேச விரோத வழக்கு – ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவு

தேச விரோத வழக்கில் கைதாகி உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சென்னை ராணிசீதை மகாலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி குற்றம் சாட்டுகிறேன் என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச […]

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதி – பிரேமலதா கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்பாரா?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆக பிரேமலதா பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் கட்சி பணிகளில் அவரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை தே.மு.தி.க. பொதுச் செயலாளராக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே விஜயகாந்த் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. […]

பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமனம்

உலகம் முழுவதுமுள்ள பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமிக்கப்பட உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பின்னர், பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே […]

6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை

ஓரே ஆண்டில் 6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வரும் தேஜ் பிரதாப் சிங், கடந்த ஆண்டில் 327 வேலை நாட்களில் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இடையில், அம்மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திய போதிலும் அசராமல் […]

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகின

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. பணப்பட்டுவாடா தொடர்புடைய ஆவணங்களும் வெளியாகியுள்ளன. ஆவணத்தில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து […]