Author: குமார்

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் – தினகரன்

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை டிடிவி தினகரன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இன்று குடகு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- *நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் […]

ஜம்மு காஷ்மீரில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவு

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால்,மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய் கூறிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு கிசிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா 74 நாட்கள் இருந்தார். முதலில் அவருக்கு லேசான காய்ச்சல் என்றனர். […]

பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை எக்ஸ்பிரஸ் பட தயாரிப்பாளர் போலீஸ் முன் சரண்

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல படத்தயாரிப்பாளர் கரீம் மொரானி, போலீசிடம் சரண்டர் ஆனார். திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கடந்த ஜனவரி மாதம் ஹயத்நகர் போலீஸ் நிலையத்தில், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான கரீம் மொரானி மீது பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக பெண் குற்றம் சாட்டியிருந்தார். […]

தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை சிறிய விசைப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டு சாலைமறியல்

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 270க்கும் மேற்ப்பட்ட பெரிய விசைப்படகுகள் தங்களுக்கு தங்கு கடல் மீன் பிடிப்பு வழங்க கோரி பல வருடங்களாக போராடி வந்த நிலையில் இவர்கள் தடையை மீறி கடந்த 18ம் தேதி தங்குகடல் மீன்பிடித்தலுக்கு சென்றதால், 163 விசைப்படகுகளுக்கு ஒரு மாதம் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் […]

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை – அமைச்சர்கள் பரபரப்பு பேச்சு

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு மீது குறைசொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். மதுரை கலெக்டர் அலு வலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நிலோபர் கபில் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அமைச்சர் […]

காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் அமைக்க கர்நாடக அரசு திட்டம்: முத்தரசன் பேட்டி

கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார். கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் புதுக்கோட்டையில் அளித்த […]

அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? – ஓ.பன்னீர் செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை

அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்திவருகிறார். மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார். அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி […]

தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர்களை விலையாக தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு […]

அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம் – வடகொரியா அறிவிப்பு

ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன. புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. […]