அரசமைப்புத் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் உள்வாங்கப்படாவிட்டால், வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுவோம் என்று பொது எதிரணியான மஹிந்த அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு, இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது. கடந்த 3 ஆம்திகதி இடைக்கால அறிக்கையின் வரைபு, வழிநடத்தல் குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரைவு மீதான கருத்துக்களை, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் […]
Author: பார்த்தீபன்
2020 தேர்தலின் பின்பும் தேசிய அரசே அமையும்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு
2020 இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்தும் தேசிய அரசே அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய அரசை நிராகரிக்கும் அளவுக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நாம் வெற்றிகரமான மே தினக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். எமது அரசியல் பலம் அதிகரித்துள்ளதை நாம் உணர்கின்றோம். எமது அடுத்த நகர்வுக்கு அது […]
குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை!
குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை! குளவிகள் தாக்கும் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு -13, கொட்டாஞ்சேனை, சென் லூசியஸ் கல்லூரியிலேயே மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் வளாகத்திலுள்ள மரமொன்றில் குளவிகள் கூடு கட்டியுள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கல் தாக்குதல் காரணமாக குளவிக் கூடொன்று கலைந்துள்ளது. இதையடுத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் குளவிகள் கொட்டியுள்ளன. மறுநாள் சனிக்கிழமையன்று கொழும்பு மாநகர […]
ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேரம் கனிந்துவிட்டது! – மஹிந்த கூறுகின்றார்
“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய காலம் கனிந்துவிட்டது. எனவே, சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். அதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நாட்டில் தற்போது நடப்பவற்றைப் பார்க்கையில் ஆட்சியைக் கவிழ்க்கும் அந்தத் தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணரக்கூடியதாக இருக்கின்றது. அதிகாரம் […]
அரசமைப்பு தயாரிப்பு குறித்து இரண்டு வாரங்களில் மைத்திரி விசேட அறிவிப்பு!
அரசமைப்பு தயாரிப்புப் பணி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம். இதன்போது அரசமைப்பு பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவர் விளக்குவார் என்று அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு அது தொடர்பில் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் […]
மஹிந்த கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் கூட்டரசு அதிர்ச்சி!
மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்குக் கிடைத்த வெற்றியால் மைத்திரி – ரணில் விக்கிரமசிங்க அரசு அதிர்ச்சியடைந்துள்ளது என்று ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மே தினத்தின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பிரதிபலித்துள்ளது. இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மஹிந்த அணியினரின் மே தினப் […]
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம்
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க நாடு முழுவதிலும் பூரண ஹர்த்தால்போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எடுப்பதற்கு இந்த வாரம் மஹிந்த அணியின் முக்கிய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளனர் என்று தெரியவருகின்றது. […]
தமிழரின் சமகால விடயங்கள் மோடி சந்திப்பில் பேசப்படும்! – அரசியல் தீர்வு முக்கியம் என்கிறார் சம்பந்தன்
“தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் நிச்சயமாகப் பேசப்படும். இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறக்கூடும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி […]
மே 18இல் முல்லைத்தீவு வருகையை கைவிடவேண்டும் ஜனாதிபதி! – கோருகின்றார் சார்ள்ஸ் எம்.பி.
தமிழ் மக்கள் கருவறுக்கப்பட்ட தினமாக அடையாளப்படுத்தப்பட்ட மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டு வெளிநாடுகளின் உதவியோடு பல்லாயிரக்கணக்கில் கருவறுக்கப்பட்ட நாளான மே 18ஐ தமிழ் மக்கள் ஆறாத வடுவாக எண்ணி நினைவுகூரும் […]
மஹிந்த பற்றி தீர்மானம் எடுக்க சு.கவின் உயர்பீடம் முஸ்தீபு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போஷகராக வைத்திருப்பதா, இல்லையா என்பதைப் பற்றிய தீர்மானம் சு.கவின் அடுத்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது என அந்தக் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் வரும் வெசாக் பூரணை தினத்தின் பின் கூடவுள்ள நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்துகொண்டே அந்தக் […]





