ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இரு தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், நீதி விசாரணை கோரியும் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மட்டக்கயப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், என்.சிறீநேசன், எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா, மாகாண அமைச்சர் ரி.துரைராஜசிங்கம் மற்றும் பெருமளவான ஊடகவியலாளர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் கடந்த புதன்கிழமை கடுமையாக தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *