கப்பம் இன்றி விடுவிப்பட்டது இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கப்பம் இன்றி விடுவிப்பட்டது இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் இருந்த எட்டு இலங்கையர்களும் கப்பம் இன்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கப்பல் தலைவர் நிக்கலஸ் அந்தோனி தெரிவித்துள்ளார்.

சோமாலிய படையினருக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து எட்டு இலங்கை பணியாளர்களும், கப்பலும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்கவும் இணங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் தாக்குதல்களை நடத்தினர்.

எனினும் தாக்குதல்களை நிறுத்துமாறு கப்பல் தலைவரால் அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்தே இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதற்கு முன்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடந்த 2012ஆம் ஆண்டு வர்த்தக கப்பல் கடத்தப்பட்டிருந்த நிலையில், ஐந்தாண்டுகளுக்கு பின்னர் குறித்த ஆரிஸ் 13 கப்பல் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil Technology News

 

Tamilnadu News