புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பிரித்தானியாவுடன் கூட்டமைப்பு பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரீஸுடன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.

கூட்டமைப்பிற்கும், பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான மேற்படி சந்திப்பில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரித்தானிய தூதரக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *