நுரைச்சோலை அனல் மின்நிலைய சீரமைப்பு பணிகள் முடிவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் முதலாவது மின் பிறப்பாக்கி செயலிழந்திருந்த நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) வழமைக்கு திரும்பும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள முதலாவது மின் பிறப்பாக்கியில் கடந்த 17ஆம் திகதி, ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைபட்டது.

இருப்பினும் இதற்கான மாற்று வழிககள் கடைபிடிக்கப்பட்டாலும், இதன் மீள் திருத்த நடவடிக்கை இன்றைய தினத்திற்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி 300 மெகாவோட் மின் விநியோகத்தை தேசிய மின்சார அமைப்பில் சேர்க்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *