இறங்குதுறை இன்மையால் பூநகரி மீனவர்கள் சிரமம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி பூநகரி கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மையால் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பூநகரியின் கடற்தொழில் கிராமங்களான வலைப்பாடு, வேரவில், நாச்சிக்குடா, பள்ளிக்குடா, ஆகிய கரையோரப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் தொழிலை மேற்கொள்ளும் வகையில் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாதுள்ளது.

மேலும் கடல்வற்றுக்காலங்களில் நீண்ட தூரத்தில் படகுகளை நிறுத்திவிட்டு வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துவருவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன், கரையோர பகுதிகள் சில கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன. எனவே கரையோரப் பாதுகாப்பு வேலிகளையும் இறங்குதுறைகளையும் அமைத்துத் தருமாறு அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *