கனகபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி பலி

கிளிநொச்சி கனகபுரம் வீதியில், இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை கோணாவில் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு, கப் ரக வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியுள்ளது.

இதில், படுகாயமடைந்த நால்வரையும் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அதில் திருநகரைச் சேர்ந்த தவராஜா விஜிதா (வயது 22) என்ற யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி பொலிஸில், சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *