பஷிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
பஷிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டில் முதலாவது குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள பஷில், இன்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 5 லட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட சிங்கள பஞ்சாங்கங்களை அச்சிடுவதற்காக பஷில், 29.4 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Tamilpriyam.com