சிங்கப்பூருக்கு பறந்தார் பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே பிரதமர் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

இதில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னதாக, இலங்கையில் முதலீடு என்ற பெயரிலான மாநாடுகள், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன.