Other News

பொன்சேகாவுக்கு பதவி வழங்க முடியும் என்றால் எனக்கு என் வழங்க முடியாது

“நாடாளுமன்றத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கட்சியில் உயர் பதவி வழங்க முடியுமென்றால், 30 வருடங்களாக கட்சிக்காகப் பாடுபட்ட தனக்கு ஏன் மீண்டுமொரு சந்தர்ப்பத்தை வழங்கக்கூடாது? – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இளைஞர் பருவத்திலேயே ஐ.தே.கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த திஸ்ஸ அத்தநாயக்க காலப்போக்கில் அக்கட்சியின் […]

அரசு

தமிழரைத் தொடர்ந்து ஏமாற்றினால் மஹிந்த போன்றே வீடு செல்வீர்கள்! – மைத்திரி – ரணில் அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

“நல்லாட்சி என்று கூறும் மைத்திரி – ரணில் அரசு தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கித்தான் ஆட்சிக்கு வந்தது. அதேவேளை, ஆட்சிக்கு வந்த பின்னர் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அரசு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இந்த அரசு ஏமாற்றினால் மஹிந்த அரசைப் போன்று இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்ப நேரிடும்.” – இவ்வாறு வவுனியாவில் வைத்து மைத்திரி – ரணில் […]

அரசுடன் நேரடிப் பேச்சுக்கு வரவேண்டும் தமிழர் தரப்பு! – அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனில் தமிழர் தரப்பு நேரடியாக அரசுடன் பேச்சுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேசத்தை வரவழைத்து தமிழர் தரப்பு தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும். புதிய அரசியல் அமைப்பின் மூலம் இனவாதம் பரவுவதையோ அல்லது நாட்டை […]

மைத்திரி அணியிலிருந்து 25 அமைச்சர்கள் மஹிந்த அணிக்கு! – செப்டெம்பரில் வருவர் என்கிறார் குமார வெல்கம எம்.பி.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்திருக்கும் அமைச்சர்கள் 25 பேர் இந்த வருஇடம் செப்டெம்பர் மாதம் மஹிந்த அணியில் இணைவர்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நல்லாட்சியை நிறுவப்போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசு தடம்புரண்டு செல்கின்றது. தேசிய அரசு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரை […]

மஹிந்த அரசின் படுகொலைகள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் மனித படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளியிடுவோம். அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும்.” – இவ்வாறு சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்துள்ள மஹிந்த அணியான பொது எதிரணியின் […]

ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா

ஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை! – போர்க்குற்ற விடயத்தில் புதிய விளக்கமளிக்கின்றார் ஹர்ஷ டி சில்வா

“போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பேரவை இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ள போதிலும், அந்த இரண்டு வருடங்களுக்குள் இந்த விசாரணையை முடிப்பதாக இலங்கை அரசு ஐ.நாவுக்கு வாக்குறுதி வழங்கவில்லை.” – இவ்வாறு வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் […]

வடமாகாண முதலமைச்சர்

மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகள்: மத்திய அரசே பொறுப்பு என்கிறார் வடக்கு முதல்வர் விக்கி

“மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டியது, மத்திய அரசின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசு தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி மக்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிலக்குடியிருப்பு மக்கள், தமது […]

ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று(திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 2 பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

வவுனியா மாவட்டத்தில் வீடற்றவர்களாக 11680 குடும்பங்கள்

வவுனியா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 680 குடும்பங்கள் வீடுகள் அற்றவர்களாகவும் 4 ஆயிரத்து 620 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றியும் உள்ளனர் என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் பல்வேறு தொழிற்சாலைகள் புனரமைப்பு செய்து, மீள ஆரம்பிக்க முடியாத சூழ்நிலையில், மட்டக்களப்பில் மதுபான தொழிற்சாலை நிர்மாணிக்கப்படுவது கண்டனத்திற்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய […]

புதிய அரசியலமைப்பே தேவை, திருத்தம் அல்ல : ஹக்கீம்

தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து முழுமையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக அர்த்தமுள்ள வகையில் […]