பொறுப்புக் கூறும் விடயத்தில் உதாசீனமாக இருந்துவரும் ஸ்ரீலங்காவை ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கு இருந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் தவறவிட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனீவாவில் நடந்துமுடிந்த ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவிற்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிகளான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் […]
Other News
மீண்டும் மீண்டும் யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது : மட்டு. மேற்கு வலய கல்விப்பணிப்பாளர்
மீண்டும் மீண்டும் பத்து வருடத்துக்கு முந்திய யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. கடந்த காலங்களில் நடந்தவைகளால் பாதாளத்துக்குப் போய்விட்டோம். இனி எழும்ப வேண்டிய காலம். ஒரு பந்தை அடித்தால் அது மேலே எழும்ப வேண்டும் அது போலத்தான் சமூகமும். அவ்வாறில்லாவிட்டால் அச்சமூகம் அழிந்து போகக்கூடிய சமூகமாக இருக்கும் என மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கனகசூரியம் அகிலா தெரிவித்தார். மண்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலளப்பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் […]
ஸ்ரீலங்காவுக்கு 42 மில்லியன் யூரோவை வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்
ஸ்ரீலங்காவின் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தவதற்கும், நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கும், 42 மில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியம் உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீலங்காவின் நிதியமைச்சர் செயலாளர் சமரதுங்கவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்ரீலங்காவுக்கான தூதுவர் டங் லாய் மார்கேயுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு திட்டங்களுக்காக 42 மில்லியன் யூரோவை (6791.4 மில்லியன் ரூபா) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது. இதில் விவசாயத்துறையை […]
ஜப்பானில் ஸ்ரீலங்கா பிரதமர் இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கிறார்
ஜப்பானுக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக நேற்றைய தினம் ஜப்பான் விஜயம் மேற்கொண்டுள்ளார். நரிடா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்த ஸ்ரீலங்கா பிரதமரை, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர் ஹிரோரோ இசுமி, ஸ்ரீலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா […]
சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்
மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்து சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுவதற்கு காரணம், தான் மக்களுடைய பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கே என்றும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே […]
யாழ். மருதங்கேணி கடல்நீர் ஊடாக நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும்
யாழ். மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில் கேள்விகள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனைக் […]
மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்; கேப்பாபுலவு மக்கள்
தாங்கள் தெரிவு செய்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளும் தம்மை ஏமாற்றி விட்டதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இன்றையதினம் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தனர். கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி வன்னி மாட்ட நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்திருந்த கேப்பாபுலவு மக்கள் தமது […]
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை; விஷேட பிரதிநிதிகள் குழு ஸ்ரீலங்கா விஜயம்
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளது. நாட்டில் நிலவும் அரசியல்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட நிலைமைகளை அவதானிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதிநிதிகள் சிலர் குழுக்கள் ஸ்ரீலங்காவுக்கு சென்று கண்காணிப்புகளை மேற்கொண்டனர். அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட […]
உண்மை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் அமைக்கப்படும்; ஹர்ஷ டி சில்வா
ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று ஸ்ரீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் ஒரு இலகுவான செயற்பாடு அல்ல எனக் குறிப்பிட்ட அவர், இனவாதிகள் மற்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுபவர்களின் தடைகளைத் தாண்டி, இதனை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு வேகமாக நல்லிணக்கத்தை அடைய முடியுமோ அந்தளவுக்கு வேகமாக தாம் நகர்ந்து […]
கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுவாரா ஸ்ரீலங்கா பிரஜை?
கனடாவில் வாழும் ஸ்ரீலங்கா பிரஜையை நாடு கடத்துவதற்கான உத்தரவை அந்த நாட்டு குடிவரவு மற்றும் அகதிகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்தமை தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டமையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற ஸ்ரீலங்கா பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபரின் மறுமதிப்பீடு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த நபர் தற்போது […]





