ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு விரைந்து செயற்பட வேண்டுமென தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இலங்கையின் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசு ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகள் காலதாமதம் இன்றி நிறைவேற்றப்படுவதுடன், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையினையும் விரைவில் ஏற்படுத்த வேண்டும். […]
Other News
வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகள் : இம்மாதம் இரண்டு முக்கிய பேச்சுக்கள்
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இம்மாதம் இரண்டு முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் நாளை திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் 24 திகதி திங்கட்கிழமை மீள்குடியேற்ற […]
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொது மக்கள் அடிப்படை வசதிகளற்ற மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டு பல்வேறு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இதுவரை அவற்றிற்கு எந்தவொரு தீட்வும் கிடைக்காத நிலையில் தொடர் கவனயீர்ப்பு […]
மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மீத்தொட்டமுள்ள குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் அரசாங்க செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் […]
கனகபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி பலி
கிளிநொச்சி கனகபுரம் வீதியில், இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கோணாவில் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு, கப் ரக வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த நால்வரையும் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அதில் திருநகரைச் சேர்ந்த தவராஜா விஜிதா (வயது 22) […]
சிறிலங்காவுக்கான வரட்சி நிவாரணம் – இந்தியாவுடன் பாகிஸ்தான், சீனா ஏட்டிக்குப் போட்டி
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரட்சியைச் சமாளிப்பதற்கு 1 பில்லியன் ரூபா பெறுமதியான 90 நீர்த்தாங்கி பாரஊர்திகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. சீன மக்கள் ஆலோசனை கலந்துரையாடல் சபையின் தேசிய குழு தலைவரான யூ செங்சென் சிறிலங்காவுக்கு கடந்த 6ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை மேற்கொண்டிருந்த பயணததின் போது இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளார். சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையை சமாளிப்பதற்கும்.சிறிலங்கா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இந்த உதவி […]
நில மீட்புப் போராட்ட மன்னார் மக்களுக்கு சர்வமதத் தலைவர்கள் ஆதரவு
மன்னாரில் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மறிச்சுக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் மக்களுக்கு இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு மன்னார் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளையும் தேசிய உலமா சபையின் தலைவர்களும் தலைமை தாங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வில்பத்து சரணாலயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி மன்னார் […]
அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது; டி.எம்.சுவாமிநாதன்
அரசியல் கைதிகளை விடுப்பதற்கு அரசாங்கத்தில் சட்ட ரீதியான முறையொன்று உள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே செயற்பட முடியும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் தங்கள் விடுவிப்பு தொடர்பில் மனுக்களை அளித்துள்ளதாகவும் இதுகுறித்து சட்ட ரீதியாக ஆராய்ந்த பின்னரே அவர்களை விடுவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி சபையினால் அமைக்கப்பட்ட கற்பகசோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிலையம், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு […]
ஆவா குழு உறுப்பினர்கள் ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த ஐந்து பேரும் ஆவா குழுவுடன் ஏற்கனவே தொடர்புகளை வைத்திருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக […]
சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும்
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா – இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வழிகாட்டல் குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பொருள் மற்றும் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அது ஒரு புதிய அரசியலமைப்பா அல்லது […]





