கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைப் பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மது உற்பத்தியை தடுக்க பொது மக்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த நபர்களின் வீட்டினை நேற்று (வியாழக்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார், 1 இலட்சத்து 61 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு […]
Other News
புலிகளில் கவனம் செலுத்தியதால் குப்பையில் கவனம் செலுத்தவில்லை – மகிந்த சொல்கிறார்
யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனத்தினைச் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் நாட்டினது பிரதானமான பிரச்சினையிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தியிருந்தோம். அதன்படி யுத்தத்தினையும் நிறைவுக்கு கொண்டுவந்திருந்தோம். […]
அரசாங்கத்தினது எந்த உதவித்திட்டங்களும் எமக்குத் தேவையில்லை: பன்னங்கண்டி மக்கள் தெரிவிப்பு
ஒரு மாத காலத்திற்கு மேலாகப் போராடிவரும் எமக்கு, இந்த அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம் போன்ற உதவித்திட்டங்கள் தேவையில்லை, நாம் உழைத்து முன்னேறுவோம். என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். தமக்கான காணி உறுதியினை மட்டும் தற்போதைக்கு பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 31ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில், […]
வவுனியாவில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைப்பு
வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்தின ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா […]
மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் உடனடியாக 60 வீடுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பணிப்பு
மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் சலுகை அளிப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற முன்னேற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முழுமையாக பாதிக்கப்பட்ட 60 வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்காக வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வுள்ளது. வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாவும் அவற்றை கொண்டு செல்வதற்காக 10, 000 […]
மோடி இலங்கை வருவதை உறுதிப்படுத்தினார் மைத்திரி!
மே மாதம் நடைபெறவுள்ள வெசாக்தின ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் மோடியும், இறுதிநாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதியும் கலந்துகொள்கிறார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட மற்றும் சில விடயங்கள் வருமாறு:- * குருநாகல், அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவியுடன் […]
மீளக்குடியேற்றம், காணாமல்போனோர் விவகாரத்துக்குத் தீர்வு! – ஜனாதிபதி வாக்குறுதி
வடக்கில் மீள்குடியேற்றம் குறித்து நடைபெறும் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திவரும் போராட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரஸ்தாபித்தார். வடக்கில் அறுபது சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர். அடுத்த மூன்று மாத காலத்தில் மிகுதியானோரும் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள். காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையைக் கவனத்தில் கொண்டு காணாமற்போனோர் தொடர்பான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார். கால அவகாசம் […]
கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம்! – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்
“முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியையும், வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியையும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் ஜனாதிபதி – பிரதமர் மட்டத்தில் பேசவேண்டியுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். […]
மஹிந்தவின் சகாக்கள் திருடிய பணத்தை மீட்க சர்வதேச உதவி! – ஐ.தே.க. தெரிவிப்பு
மஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் திருடிய பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச உதவிகள் கோரப்பட்டிருக்கின்றன என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஊழல், மோசடியால் இந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மக்கள் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து எம்மிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதும், ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் […]
இப்படியே சென்றால் இராணுவப் புரட்சிதான்! – அரசுக்கு டியூ எச்சரிக்கை
இந்த அரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சி ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி உருவானது. மஹிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. […]





