யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் நினைவுதினம், யாழ். பலாலி படைத் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, பலாலி படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அத்தோடு, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கடற்படை தளபதி, வடக்கு மாகாண பிரதேச செயலாளர்கள், மதகுருமார்கள், ஆளுநரின் செயலாளர், […]
Other News
திருநெல்வேலியில் ரயர் ஒட்டும் கடை தீக்கிரை
யாழ். திருநெல்வேலி சந்தியில் ரயர் ஒட்டும் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கடையின் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளதோடு பெறுமதி வாய்ந்த பொருட்களும் எரிந்துள்ளன. நேற்றிரவு கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டுச் சென்ற பின்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சென்று பார்த்தபோது கடையின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்தோடு, சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பாலாகியுள்ளன. மின் […]
குறைக்கப்பட்ட மஹிந்தவின் பாதுகாப்பு மீண்டும் அதிகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவிலிருந்து 50 பேர் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் 42 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 பேரை குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த 50 பேரை மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து நீக்கும் நடவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அதற்கான […]
நவீன லேசர் வெசாக் அலங்காரப் பந்தல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது
உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வலங்காரப் பந்தல் நாளை மறுதினம் (புதன்கிழமை) மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும் இந்த வெசாக் அலங்கார பந்தல், கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்நவீன இவ்வெசாக் அலங்கார […]
தமிழ் பிரதேசங்களில் பணிக்கமர்த்தப்படும் பெரும்பான்மையின இளைஞர்கள்
வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இதுவரை காலமும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களிடையே பெரும் விசனத்தை […]
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம்
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க நாடு முழுவதிலும் பூரண ஹர்த்தால்போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எடுப்பதற்கு இந்த வாரம் மஹிந்த அணியின் முக்கிய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளனர் என்று தெரியவருகின்றது. […]
தமிழரின் சமகால விடயங்கள் மோடி சந்திப்பில் பேசப்படும்! – அரசியல் தீர்வு முக்கியம் என்கிறார் சம்பந்தன்
“தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் நிச்சயமாகப் பேசப்படும். இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறக்கூடும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி […]
மே 18இல் முல்லைத்தீவு வருகையை கைவிடவேண்டும் ஜனாதிபதி! – கோருகின்றார் சார்ள்ஸ் எம்.பி.
தமிழ் மக்கள் கருவறுக்கப்பட்ட தினமாக அடையாளப்படுத்தப்பட்ட மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டு வெளிநாடுகளின் உதவியோடு பல்லாயிரக்கணக்கில் கருவறுக்கப்பட்ட நாளான மே 18ஐ தமிழ் மக்கள் ஆறாத வடுவாக எண்ணி நினைவுகூரும் […]
மஹிந்த பற்றி தீர்மானம் எடுக்க சு.கவின் உயர்பீடம் முஸ்தீபு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போஷகராக வைத்திருப்பதா, இல்லையா என்பதைப் பற்றிய தீர்மானம் சு.கவின் அடுத்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது என அந்தக் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் வரும் வெசாக் பூரணை தினத்தின் பின் கூடவுள்ள நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்துகொண்டே அந்தக் […]
பொன்சேகாவுக்கான புதிய பதவி குறித்து ஆர்வப்படும் இராஜதந்திரிகள்!
பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தில் சிறப்புச் செயலணியை உருவாக்கி அதிகாரங்களை ஒப்படைக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து உள்நாட்டு அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையைத் ஏற்படுத்தியிருந்தது. இதன் […]





