வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன், வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வுக்கு முன்னதாக இன்று 12ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான […]
Other News
செய்த குற்றங்களுக்கு இப்போது தண்டனை! – வேதனையடைகின்றார் நாமல்.
எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தண்டனையை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அந்தக் […]
ஜுலை 13இல் பங்களாதேஷ் பறக்கின்றார் மைத்திரி!
பங்களாதேஷ் பிரதமர் ஷிக் ஹஸினாவின் அழைப்பையேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும், அந்த மாதம் 16ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்துக்கு பங்களாதேஷ் ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிவாரண உதவியாக வழங்கியிருந்தது எனவும், அந்த உதவியைத் தொடர்ந்து ஜனாதிபதியை தனது நாட்டுக்கு […]
மஹிந்தவுக்கு உதவிய பாதாளக் குழுக்களின் விவரங்கள் என்னிடம்! – விரைவில் வெளியிடுவேன் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மிரட்டல்
மஹிந்த அணியினர் அதிகம் துள்ளினால் அவர்களுக்கு உதவிய மற்றும் காடைத்தனத்தில் ஈடுபட்ட பாதாள உலகக் குழுவினரின் பெயர்ப்பட்டியலை வெளியிடப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்த, ஆட்சியைவிட்டுச் செல்லும்போது எங்களது தலையில் கட்டிவிட்டுச் சென்ற பிரச்சினைகளை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். மீதொட்டமுல்ல குப்பைமேடு மற்றும் சைட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர் […]
காணாமல்போன படையினர் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டுமாம்! – மஹிந்த அணியின் கோரிக்கை இது .
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அலுவலகம் அமைக்கப்படுமாக இருந்தால் காணாமல்போன படையினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மஹிந்த அணி கூறியுள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம அரசிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாம் இன்று யுத்தத்தையும், யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷவையும் மறந்துவிட்டே பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இவ்வளவு தூரமேனும் பயணிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் யுத்தம் முடிவுக்குக் […]
புதிய அரசமைப்புத் திட்டத்துக்கு எதிராக சு.க. உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி!
உத்தேச அரசமைப்புத் திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டால் தாங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம் எனவும், அத்தகைய காலகட்டத்தில் இவ்விடயத்தில் தாங்கள் பொது எதிரணியான மஹிந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசாரார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் கடந்த அரசமைப்புக் குழுக் கூட்டத்தின்போது சிங்களத்தில் ‘ஏகிய’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தையை ஆங்கிலத்தில் […]
வடக்கு அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி: சரியாகவே நடந்தது விசாரணைக் குழு என்கிறார் விக்கி
“வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சரியாகத்தான் செயற்பட்டது. அமைச்சர்கள், விசாரணைக் குழு முன்பாக தங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணைக் குழு உரிய முறையில்தான் செயற்பட்டது.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்தார். “பொதுவாகக் குற்றச்சாட்டுகள் எமது உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் நால்வரான அமைச்சர்கள் மீது மற்றைய […]
வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு
வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் உடன் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் […]
போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு
போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. எனவே, அதை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் இனியும் தொடரக்கூடாது.” – இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை […]
5 தமிழர்களைக் கொன்ற பொலிஸார் இருவருக்கு மரணதண்டனை! – இருபது வருடங்களுக்குப் பின் தீர்ப்பு
அம்பாறையில் 5 தமிழர்களை சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரும் அம்பாறை மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சுமுது பிரேமச்சந்திர மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அம்பாறை மாவட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் கான்ஸ்டபிள்களான ஆர்.பி.காமினி குமாரசிங்க மற்றும் ஜே.எம்.நிமல் குணரத்ன ஆகிய இருவருக்குமே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபரான ஏ.டபிள்யூ.வசந்தகுமார எனும் கான்ஸ்டபிள் வழக்கு விசாரணை நடைபெற்ற […]





