கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் ரயில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் 1 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை சேதத்திற்குள்ளானது. இதன்போது புகையிரத பெட்டிகள் நான்கு பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்த பாதையினையும் ரயில் சேவையினையும் துரித கதியில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய […]
Other News
பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர்
பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வு வழங்குவதில் யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள சவாலான பணி பற்றி கொழும்பில் இன்று ஆரம்பமான செயலமர்வில் பிரதமர் உரையாற்றினார்;. பாகிஸ்தான், இந்தியா உட்பட பிராந்தியத்தின் சில இடங்களில ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். […]
ஜனாதிபதிக்கு பங்களாதேஷில் அமோக வரவேற்பு
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூ ன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்று ள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் . ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்களாதே ஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். அவருக்கு கோலாகலமானவரவேற்பினை அளிப்பதற் கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது . டாக்கா […]
வீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு
சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி ராணுவத்தினரின் வான் ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய […]
ஐ.எஸ். அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட மொசூல் நகரில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்
மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டதை அந்த நகர மக்கள் நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சிரியாவிலும், ஈராக்கின் சில பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் 2-வது மிகப்பெரிய நகரான மொசூலை கைப்பற்றிக் கொண்டனர். அதை, சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தங்களுடைய நாடாகவும் அறிவித்தனர். இதையடுத்து மொசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் உதவியுடன் […]
அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டம்
அதிபர் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 35 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா சமீபத்தில் வெளியேற்றியது. மேலும் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க தூதரக வளாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் […]
மெல்லிய பொலித்தீன் பாவனைக்கு தடை
மெல்லிய பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பில் சுற்றாடல் துறை அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் அமைச்சரவை ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தேசிய , மத […]
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கவேண்டாம் – பிரதமர் கோரிக்கை
புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எடுத்துக்கூறும் போலி சுலோகங்களின் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மல்வத்து பீட மஹாநாயக்கருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, பௌத்த பீடங்களுக்கு இடையில் பேதங்களும் ஏற்படுத்தப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அன்று அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அஞ்சி மௌனம் சாதித்ததாக பிரதமர் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற இளைஞர் பிக்குமார் ஒன்றியத்துடனான கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டார். […]
தமிழ் இளைஞர்கள் கடத்தல் சம்பவம்: கடற்படை அதிகாரியை கைதுசெய்ய உத்தரவு
கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு வெள்ளவத்தை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பாக, கடற்படையின் முக்கிய அதிகாரி ஒருவரை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 கடற்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான […]
அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம்: சம்பந்தன்
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் ஆதங்கத்தை வெளியிட்ட உறவுகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக […]





