Other News

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்கும் : ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு, விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பட்டியலிடுவதற்கு, பயன்படுத்தப்பட்ட நடைமுறைகளின் சட்டபூர்வ தன்மை தொடர்பானதே என்றும் ஐரோப்பிய […]

வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், அண்மையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த தகவல்களின் பிரகாரம், இவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவி வித்தியா படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபரை மக்கள் பிடித்து கட்டிவைத்திருந்த நிலையில், […]

நல்லூர் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று 158 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த காணாமல் […]

ரவிராஜ் கொலை விவகாரம்: நேவி சம்பத்திற்கு பிடியாணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத்திற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக ரவிராஜின் பாரியாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று […]

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்ச வீட்டை உடன் அமைக்குமாறு கோரும் பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மேற்படி வெளிச்ச வீட்டை அமைக்குமாறு கோரி கடந்த 8 வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த […]

புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனவாதத்தை பாதுகாக்கும் அரசாங்கம் இதனை பாதிப்பாக கருதி, இதற்கெதிராக செயற்படுமென தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அப்போது தமிழ் மக்கள் அனைவரும் […]

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திரவின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்தப் பதவி உயர்வுடன் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சரத் ஹேமச்சந்திரவின் மனைவி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்தார். தற்போது அவரது கணவன் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்கு […]

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதற்கான சான்றுகளை ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதியை தொடர்ந்து முடக்கிவைக்கும் உத்தரவையும் ரத்துச் செய்தும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

யாழ். நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து

உலகத்திற்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து என த.தே.மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை கண்டித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலானது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒர் விடயம் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த […]