Other News

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை தவிர்த்த சித்தார்த்தன் எம்.பி.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. பங்கேற்கவில்லை. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சுமார் 45 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான நியமன ஆசன விவகாரத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் […]

ரணிலும் ரவியும் உடன் பதவி விலகவேண்டும்! – நாமல் வலியுறுத்து 

“முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தில்லுமுல்லுகள் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமாகியிருப்பதால் அவரும் அவருக்குத் துணைநின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியான […]

மாகாண சபைத் தேர்தல்களின் ஒத்திவைப்புக்கு எதிராக மஹிந்த அணி நீதிமன்றம் செல்ல தீர்மானம்!

மூன்று மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக பொது எதிரணியான மஹிந்த அணி நீதிமன்றம் செல்லவிருப்பதாக தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூல அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளது. பொது எதிரணியின் சார்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவின் மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வருடத்தின் செப்டெம்பர் /ஒக்டோபர் மாதங்களில் பதவிக்காலம் நிறைவடையவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களும் […]

25 பக்கங்களாக குறைந்த இடைக்கால அறிக்கை! – அதுவே நாடாளுமன்றுக்கு வரும்

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை 35 பக்கத்திலிருந்து 25 பக்கமாகக் குறைத்து இறுதி செய்துள்ளது. 25 பக்கமாகக் குறைக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே அரசியல் நிர்ணய சபையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் வழிநடத்தல் குழுவின் கூட்டம் 3 தினங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அதனைக் குறைக்கவேண்டும் என்ற யோசனை இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. […]

அமைச்சர் பதவியை உடன் துறக்கவேண்டும் ரவி! – பத்தரமுல்ல மகாநாயக்கர் வலியுறுத்து 

உலகின் தலைசிறந்த நிதி அமைச்சர் என்ற விருதைப்பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பிணைமுறி மோசடி நடவடிக்கைகளால் நாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தியிருக்கிறார் எனவும், அதனால் அவர் தனது பதவியை உடனடியாகத் துறக்கவேண்டும் எனவும் ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “ரவி கருணாநாயக்கவின் லீலைகள் இந்த அரசு நியமித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அம்பலமாகியுள்ளன. […]

வட மாகாண சுழற்சிமுறை ஆசனம்: புளொட்டின் கோரிக்கை நிராகரிப்பு; ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை! – தடுத்து நிறுத்துமாறு சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்

வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சிமுறை நியமன ஆசன விடயத்தில், புளொட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரான ஆர்.ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தின் அடிப்படையில் பதவி வகித்த வவுனியா மாவட்ட உறுப்பினர் மயூரன், மாகாண சபையின் நூறாவது அமர்வுடன் விடை பெற்றார். மாகாண சபையில் நன்றியுரையும் நிகழ்த்தினார். வடக்கு […]

திங்களன்று விஜயகலாவை அழைத்துள்ள இரகசிய பொலிஸ்

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமாரை புங்குடுதீவு சென்று காப்பாற்றுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் அநுருந்த ஜயசிங்கவிற்கு பணித்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இரகசிய பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை 28ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விஜயகலா அதனை மாற்றி 31ம் திகதி […]

ரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த […]

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் […]

பெண்களுக்கு 50 வயதுக்கு பிறகு ‘செக்ஸ்’ அவசியம்: ஐரோப்பிய கோர்ட்டு கருத்து

பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபட வயது வரம்பு இல்லை என்றும் 50 வயதுக்கு பிறகு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபடுவது அவசியம் என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் மரியா ஜிவோன் கார்வல்கோ மொராய்ஸ் (72). 1995-ம் ஆண்டு 50-வது வயதில் அவரது பிறப்பு உறுப்பில் ஆபரேசன் நடந்தது. அப்போது நடந்த தவறான ஆபரேசனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரால் ‘செக்ஸ்’சில் ஈடுபட முடியவில்லை. அதை தொடர்ந்து […]