யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இனந்தெரியாத இளைஞர்கள் குழுவினரால் துரத்தித் துரத்தி வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் இருவரும் கொக்குவில், பொற்பதி வீதிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் கண்காணிப்புப் பணியில் சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் துணிகரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இரண்டு பொலிஸாரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 5 மோட்டார்சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தித் துரத்தி இந்தத் […]
Other News
நீதிபதி இளஞ்செழியன் மீது திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு! – வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் தெரிவிப்பு
“யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் கொலைசெய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நல்லூரில் கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனே இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார். அவரது மெய்ப்பாதுகாவலரான சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே தனது உயிரைக் கொடுத்து நீதிபதியைக் காப்பாற்றியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரைக் கண்டதும் […]
தப்புமா ரவியின் பதவி? ஓகஸ்ட் 2இன் பின்பே முடிவு! – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரச தரப்பிலும் ஆதரவு
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தேசிய அரசிலுள்ள உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி ஆஜராகி வெளிவிவகார அமைச்சர் வாக்குமூலமளிக்கவுள்ளார். அதன்போது அவர் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வு அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக, தேசிய அரசுக்குப் பெரும் […]
துமிந்தவின் பதவியை பறிக்கவே வேண்டாம்! – அவர் சிறந்த இளம் தலைவர் என்கிறார் அமரவீர
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நீக்கவேண்டுமென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்குரிய தேவைப்பாடு இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். துமிந்த திஸாநாயக்க சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டுவருகின்றார் என்று சு.கவின் முக்கியஸ்தரான அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களுள் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் மஹிந்த அமரவீர, […]
ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது! – துமிந்தவை நீக்குவது சு.கவுக்கு நல்லது என்கிறார் டிலான்
“ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்தும் துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும்” என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது எனவும், துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “2020இல் தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்ற இலக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த இலக்கை அடையமுடியாமல் சில தடைகள் […]
புதிய அரசமைப்பு மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்! – சம்பந்தன் நம்பிக்கை
புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசின் முயற்சி ஊடாக இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இலங்கை தொடர்பான இந்தியாவின் நலன்கள் என்பது பொருளாதாரம் மற்றும் மூலோபாய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் இந்தியா […]
தமிழரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும்! – கனேடியத் தூதுவரிடம் சம்பந்தன் வலியுறுத்து
“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்காமல் உடன் தீர்வு வழங்கவேண்டும். இதற்கு கனேடிய அரசு உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள […]
காணாமல்போனோர் அலுவலகத்தால் இராணுவத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்கிறார் திஸ்ஸ விதாரண!
காணாமல்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென லங்கா சமசமாஜக் கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பாகக் கண்டறிவதற்கு அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் ஊடாக நாட்டின் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இந்த அலுவலகத்தின் பரிந்துரைகள் சர்வதேச நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்கே அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […]
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து
“காணாமல்போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.” – இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். “காலத்தை கடத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் […]
வித்தியா படுகொலை வழக்கு: சி.ஐ.டியின் விசாரணைக்கு சமுகமளிக்காத விஜயகலா!
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்க, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டபோதும், அவர் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்று தெரியவருகின்றது. பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், வடக்கு மாகாணத்தின் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார். ஊர்காவற்துறை நீதிமன்றில் […]





