அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதாகக் கூறி இவர்கள் செய்த வேலை என்ன? அது பாரிய கொள்ளையாகும். வரலாற்றில் […]
Other News
மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கம் பேச முடியாது: நஸீர் அஹமட்
மக்களின் மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தினைப் பேச முடியாது என கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடா்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்னுமொரு இனத்தினை நசுக்கும் விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கும் மக்களால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. அதேவேளை ஒரு சிலரின் […]
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் […]
கருணாவின் மாற்று தமிழ் சக்தி கனவு பலிக்காது: முபீன்
தனியொரு மாற்று தமிழ் சக்தியாக உருவாகுவதற்கு முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் முயற்சிப்பது, நிறைவேறாத பகற்கனவாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்துள்ளார். தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் இணைந்துகொள்ள வேண்டுமென, அண்மையில் கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முபீன் வெளியிட்டுள்ள அறிக்கை […]
தேர்தலை பிற்போடுவது கிழக்கின் சிறுபான்மையினருக்கு சாதகமாகிவிடும்: பசீர் சேகுதாவூத்
கிழக்கு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதானது, பெரும்பாண்மை சமூகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்படும் காலங்களில் அதன் ஆட்சி சிங்களவர்களின் கைகளுக்குச் செல்வதால், அவர்கள் நினைத்ததை அக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றிக்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டு […]
ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை: தயாசிறி
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய காலத்தில், அவரது உறவினர்களுக்கு பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்து, வாடகையும் செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டு, தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]
பெற்றோலிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!
ஜனாதிபதியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையை அடுத்து வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் தொடர்பில் சீன நிறுவனத்துடன் கலந்தாலோசித்து குறித்த ஒப்பந்தத்தில் சேர்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்: டிரம்ப், ஜப்பான் பிரதமருடன் பேச்சு
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணையால் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க நகரங்களையும் தாக்க முடியும். ஏற்கனவே இதேபோன்ற ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருந்ததால் 2-வது சோதனையால் அமெரிக்கா கடும் […]
வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு அமெரிக்கா திடீர் தடை – சர்வாதிகாரி என கடும் விமர்சனம்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலை […]
நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீது 4 கிரிமினல் வழக்குகளை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்தது. நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு கராச்சி: பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் பதவி இழந்தார். வருமானத்துக்கு அதிகமாக இவரது மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் சொத்து […]





