யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதனைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் […]
Other News
உலக தமிழராய்ச்சி மாநாட்டு யாழ்ப்பாணத்தில்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இதன்படி […]
வடக்கின் மீது கண்வைத்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக கடந்த மாத இறுதியில் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் பொறுப்பேற்றிருந்தார். முதலில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள படைத்தளங்களுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 30ஆம் நாள் கிளிநொச்சி படைகளின் […]
யாழ். வாள்வெட்டுச் சம்பவங்கள்: முன்னாள் போராளிகளை குறிவைக்கின்றது அரசு!
இறுதிப்போரின்போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு உரியவகையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு ஆராயவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வடக்கிலிருந்து படைமுகாம்கள் அகற்றப்படக்கூடாது எனவும் இடித்துரைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் பொலிஸார்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளது. […]
இலங்கையைக் கூறுபோட்டு விற்கின்ற ஆட்சியாளர்களுக்குத் தண்டனை உறுதி! – சரத் வீரசேகர கூறுகின்றார்
“இலங்கையின் வளங்களை சர்வதேசத்துக்குக் கூறுபோட்டுக்கொடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அமையப்போகும் வேறோர் அரசின்கீழ் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கு எமது நாட்டின் அரச வளங்களை விற்பனைசெய்வதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு வளங்களற்ற நாடாக […]
பிணைமுறி மோசடியாளர்களுக்கு உடன் தண்டனை வழங்கவேண்டும்! – சு.கவின் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம்
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலர் பின்புலமாக இருந்ததாகத் தகவல்கள் அம்பலமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலர் அழுத்தம் கொடுத்துவருகின்றனர் எனத் தெரியவருகின்றது. பிணைமுறி மோசடி விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பின்புலமாக இருந்துள்ளனர் என்று குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்துவரும் […]
யாழில் முப்படைகள் களமிறக்கப்படுவதை ஏற்கவே முடியாது! – கூட்டமைப்பு திட்டவட்டம்
“யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணங்காட்டி முப்படைகளைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் […]
வடக்கில் தாக்குதல் ஆரம்பமே! – போகப் போக அவை அது அதிகரிக்கும் என்கிறார் மஹிந்த
“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பமாகும்போது பொலிஸார் மீதுதான் முதலில் தாக்குதல் நடத்தினார்கள். வடக்கில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே. போகப் போக இன்னும் நடக்கும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அலுவலர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில், கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு: அக்கறையோடு ஜனாதிபதி செயற்படுகிறார் என்கிறார் ஒஸ்டின் பெர்னாண்டோ!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையோடு செயற்படுகின்றார் அவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவில் இராணுவம் வசமுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதத்துக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பதில் அனுப்பியுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு […]
காணி விடுவிப்பு: தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து பேசுவோம் என்கிறார் சம்பந்தன்!
“கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் தீர்வொன்றைப் பெறும் முகமாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடனான கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மேற்படி காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் வினவியபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு […]





