பெற்றோலிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜனாதிபதியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையை அடுத்து வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதேவேளை, தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் தொடர்பில் சீன நிறுவனத்துடன் கலந்தாலோசித்து குறித்த ஒப்பந்தத்தில் சேர்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *