Other News

உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்கு! – ஜகத் ஜயசூரிய விவகாரம் குறித்து சுமந்திரன் கருத்து

“பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் நீதி நியாயம் கிடைப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டதால்தான் நமது மக்கள் வெளிநாடுகளில் வழக்குப் போடும் நிலைமை வந்திருக்கின்றது.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னித் தளபதியாக இருந்தவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தற்போது பிரேஸில் மற்றும் அதைச் சூழ்ந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக […]

பொறுப்புக்கூறலிலிருந்து பின்வாங்கவில்லை அரசு! மெதுவாகவே அது நிறைவேற்றப்படும்!! அவசரப்படக்கூடாது என்கிறார் மைத்திரி

பொறுப்புக்கூறலிலிருந்து அரசு பின்வாங்கவில்லை என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கே உரிய பாணியில் மெதுவாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசு பின்வாங்குகின்றது என அனைத்துலக மட்டத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி […]

“எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு, தெற்கில் போராட்டம் 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பிலும் நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. வலிந்து காணாமல்போகச்செய்யப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட சமூகத்தினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு காணாமல் […]

நல்லாட்சி அரசில் அடுத்து என்ன? செப். 4இல் வெளியாகும் அறிவிப்பு! – களமிறக்கப்படுகின்றார் மங்கள

நல்லாட்சி என ஆட்சிசெய்யும் தேசிய அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றியும், முன்நோக்கி வந்த பயணம் குறித்தும் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி விசேட அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது. அரசின் சார்பில் மேற்படி அறிவிப்பை நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிடவுள்ளார். இதன்போது அரசின் வரிக்கொள்கைகள் பற்றியும் விவரிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப்பீடமேறி இம்மாத நடுப்பகுதியுடன் ஈராண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், […]

’20’இற்கு மேற்குலகம் போர்க்கொடி! இராஜதந்திர நெருக்கடிக்குள் அரசு!! – தேர்தலை விரைந்து  நடத்துமாறு அழுத்தம் 

மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் அரசு முன்னெடுத்துவரும் காய்நகர்த்தல்களுக்கு மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கொழும்பிலுள்ள தமது தூதுவர்கள் ஊடாகவே மேற்படி நாடுகள், இலங்கை அரசிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும்  அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் நோக்கிலும் 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டவரைபை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்தச் […]

’20’ இற்கு வலுக்கிறது எதிர்ப்பு! திருத்துகிறது அரசு!! கிழக்கில் 7இல் வாக்கெடுப்பு; வடக்கில் 4இல் பலப்பரீட்சை

மாகாண சபைகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவருவதால் அதில் முக்கிய சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசு அவசரமாக தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபைகளின் அனுமதியையும் அரசு கோரியுள்ளது. இதன்படி […]

சர்வதேசம் ஊடாக தமிழருக்கு நீதி: எதிர்பார்ப்பு தளர்ந்துபோகவில்லை!! – அமெரிக்க காங்கிரஸ் அலுவலர்களிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

“சர்வதேச சமூகத்தின் ஊடாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால், நாம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து தளர்ந்துபோய்விடவில்லை. ஐ.நா. தீர்மானத்தை மைத்திரி ரணில் தலைமையிலான அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தன்னை சந்தித்த அமெரிக்கக் காங்கிரஸ் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இந்தச் […]

’20’ குறித்து சம்பந்தன் – ஹாபீஸ் மந்திராலோசனை!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் நேற்றுமுன்தினம் மந்திராலோசனை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டது. இந்நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் […]

அஸ்வருக்கு  இறுதி அஞ்சலி செலுத்தினார் மைத்திரி! 

மறைந்த முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளருமான ஏ.எச்.எம். அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தினார். தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம்  04 என்ற முகவரியிலுள்ள அஸ்வரின் வீட்டில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  கலந்துகொண்டனர். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு7.15 மணியளவில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அஸ்வர் காலமானார். […]

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக இரையாகக் கூடாது

தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த அவர்கள், தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு நல்லாட்சி தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை அழைத்துப் பேச […]