நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலென கெடுமவத்த பகுதியில் 7 வெற்று தோட்டாக்களை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர் கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்ஸிற்காக நின்றுக்கொண்டிருந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொலித்தீன் பையை பார்க்கும் பொழுது அதில் தோட்டாக்கள் இருந்ததை கண்டு உடனடியாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […]
Other News
தமிழக ஆளுனருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு
சமீபத்தில் தமிழக ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் சமீபத்தில் ‘மெர்சல் படத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதன் பின்னர் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச்.ராஜா, ஆளுனருடன் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை […]
இன்றைய ராசிபலன் 26.10.2017
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். […]
இன்றைய ராசிபலன் 25.10.2017
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல் களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச் சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னைபுரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். […]
காதல் தோல்வியில் இருந்த ஓவியாவிற்கு புதிய பாட்னெர்!
ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை, பிக் பொஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் […]
இந்த வார ராசிபலன்… உச்சக்கட்ட அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?
மேஷம் மேஷராசிக்காரர்களுக்குப் பண வரவுக்குக் குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும் என்பதால், தற்காலிகமாகக் குடும்பத்தை […]
திரு பொன்னையா கனகலிங்கம்
திரு பொன்னையா கனகலிங்கம் (மிருக வைத்தியர்) தோற்றம் : 23 ஓகஸ்ட் 1949 — மறைவு : 20 ஒக்ரோபர் 2017 யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கனகலிங்கம் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும், கவிதா(ஜெர்மனி), சுதர்சன்(இலங்கை), சுஜிந்தன்(கனடா), சுகந்தன்(சுவிஸ்), சுஜீவன்(கனடா), றொபிதா(கனடா) […]
யாழில் தொடர்கிறது பெரும் பதற்றம்!
யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞரொருவர் படுகாயமடைந்திருந்தார். குறித்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது 24) என்பவரே உயிரிழந்தவராவார். இந்தச் […]
உண்ணாவிரதக் கைதிகள் பலவந்தமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பு
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் பலவந்தமாகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு இடமாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 25ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளான ம.சுலக்ஷன், க.தர்ஷன், இ.திருவருள் மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவர்களது உடல் பலவீனமடைந்து அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் […]
தேயிலை மலையை முறையாக பராமரிக்க கோரி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து அத்தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்டிரதன் செம்புவத்தை தேயிலை மலை சில வருட காலமாக பராமரிக்க படாமல் காடாக மாறியிருப்பதால் தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் பயத்தால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் […]





