அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூட, ராகுல் காந்தி ‘டுவிட்’களுக்கு ரஷியா, கஜகஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மறுடுவிட் வருவதை கிண்டல் செய்து, ‘‘ஒரு வேளை ரஷியா, இந்தோனேசியா, கஜகஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ராகுல் காந்தி திட்டமிடுகிறாரா?’’ என கூறி இருந்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் எம்.பி., செய்தி […]
Other News
வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
நாட்டின் முதலாவது உள்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்–மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் ‘‘ சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்’’ என கேட்டுக் […]
வரிவிகித கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்
நாடு முழுவதும் ஒரே மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரி முறையை ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வகித்து வருகிறது. இந்த வரி முறையில் இருந்து உணவு தானியங்கள், பால், பழம் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பொருட்களுக்கு, சேவைகளுக்கு 5, 12, 18, […]
பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எம்.பி. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– உங்களது ஊழலுக்கு எதிரான போர் பற்றிய உறுதிமொழிக்கும், குறிப்பாக உயர்மட்டத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து வழக்கு பதிவு செய்தமைக்காகவும் நாடு பெருமை கொள்கிறது. அதேசமயம் இந்த வழக்குகள் விசாரணையில் மிதமிஞ்சிய தாமதம் ஏற்படுவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். குறிப்பாக ஏர்செல்–மேக்சிஸ், சாரதா சீட்டு கம்பெனி, ராபர்ட் வதேரா […]
இன்றைய ராசிபலன் 23.10.2017
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் ரிஷபம்: மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு […]
ஸ்பெயின் முடிவுகளை ஏற்கமாட்டோம் – கேடலோனியா தலைவர்
ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயின் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என கேடலோனியா அரசுத் தலைவர் கார்லஸ் புஜ்டெமோண்ட் அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியான கேடலோனியா தனிநாடாக மாற இம்மாதத் தொடக்கத்தில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. மாகாண அரசும், பல்வேறு அமைப்புக்களும் இந்த வாக்கெடுப்பை நடத்தின. ஆனால், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் அரசும், உச்சநீதிமன்றமும் அறிவித்தன. இதைத் தொடர்ந்து மாகாண அரசின் அதிகாரங்களைக் குறைத்து ஸ்பெயின் பிரதமர் ரஜோய் […]
ஓவியாவிற்கு இலங்கையிலிருந்து வந்த பரிசு!!! என்ன தெரியுமா?
தமிழில் சிறிது நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து கொண்டிருந்தார் ஓவியா. வேறு வழி இல்லாமல், தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. Loading… அவரின் நேர்மைக்காகவே தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். ஓவியாவின் மார்க்கெட் உயர்ந்ததால் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிச் சென்றாலும் ஓவியா ஆர்மி இன்னும் சமூக […]
“தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!” – யாழில் செவ்வாயன்று மீண்டும் போராட்டம்
தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கடந்த 27 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. “உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!”, “அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று!”, “அனைத்து […]
இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தை குழப்பியடிக்கத் தயாராகிறது மஹிந்த அணி!
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த விவாதத்தையும், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியையும் கைவிடுமாறு கோரி மஹிந்த அணியான பொது எதிரணி போராட்டம் நடத்தவுள்ளது. விவாதம் ஆரம்பமாகும் 30ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் முன்பாகவே குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு மஹிந்த அணி திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாரிய அளவிலான மக்கள் தொகையையும் அந்தப் […]
மைத்திரி – மஹிந்த விரைவில் நேருக்கு நேர் பேச்சு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பொது எதிரணி பக்கமிருக்கும் சு.க. உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையிலேயே, சு.கவின் மூத்த அமைச்சர்களின் மத்தியஸ்தத்துடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்போது இணைந்து பயணிக்க வருமாறு மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஜனாதிபதி மைத்திரி […]





