அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில், 316 மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்படுள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் […]
Other News
காலம் கனியும் போது கட்டாயம் திருமணம் நடக்கும் ; ராகுல் காந்தி
தனக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது நடக்கும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் விதியின் மீது நம்பிக்கை […]
கதிர்காம சர்ச்சை குறித்து ஆராய விசேட குழு
கதிர்காமம் கோயிலினுள் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது சில வாரங்களுக்கு முன் கதிர்காமம் கோயிலில் காலை தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, கோயில் கதவைத் திறப்பதில் கோயில் நிர்வாகத் தரப்புக்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்கு நிலையான அபிவிருத்தி, வனவிலங்குகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா விசேட குழுவொன்றை […]
இந்தியா புறப்பட்டார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்தியா புறப்பட்டார். அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றுள்ளார். சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தவுள்ள பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தியா செல்கின்றார்.
புகையிரதம் மோதி வயோதிபர் பலி!
சிலாபம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (26) மாலை வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் போமுல்லையைச் சேர்ந்த எச்.ரத்நாயக்க (63) என்று தெரியவந்துள்ளது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது விபத்தா, தற்கொலையா என்று விசாரணை நடத்திவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.
முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.
கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியாவில், கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலத்தை இன்று (27) பிற்பகல் பொலிசார் மீட்டுள்ளனர். வவுனியா – உக்கிளாங்குளம், பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்த தியாகலிங்கம் ரகுவரன் (26) என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளிக்கப்பட்டிருந்தது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பினால் மனமுடைந்த நிலையில் ரகுவரன் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 […]
சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது கட்டலோனியா
ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரக் குடியரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டலோனிய மக்கள் பெரும் சந்தோஷக் களிப்பில் சுதந்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர். கட்டலோனிய பாராளுமன்றில் இன்று (27) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம், ஸ்பெயினின் ஆளுகையில் இருந்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றுள்ளது. கட்டலோனியாவின் ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலக்கி, அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஸ்பெயின் பிரதமர் […]
மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை
“உயிரிழந்த தந்தை குறித்து எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளைதானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா? அப்பா வர நாங்கள் பாக்குக்கு போவோம் என்று அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் […]
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் துஷார தலுவத்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரை துஷார தலுவத்தை தாக்கியிருந்தார். இது குறித்த காட்சிகள் ஊடகங்களில் பரவியதையடுத்து அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இடமாற்றம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை என்பனவற்றுக்கு முகங்கொடுத்திருந்த அவர் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது.





