Other News

ஓவியா யாருடன் நிச்சயதார்த்தம் செய்கின்றார்?

பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா ஆரவை காதலிப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த தீபாவளி தினத்தின் போது, தனக்கு பாட்னர் ஒருவர் இருப்பதாகவும், அது தான் வளர்க்கும் நாய் எனவும் ஓவியா தெரிவித்திருந்தார். இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் உள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள், யாரோ ஒருவருடன் ஓவியா நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவுள்ளார் என பதிவுகளை […]

இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு

இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நவீனப்படுத்த முன்னுரிமை இந்திய ராணுவத்துக்கு தேவையான கணிசமான ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தை நவீனப்படுத்தப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ராணுவத்தின் போர்திறனை மேம்படுத்துவதற்கு இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார். […]

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் […]

லிப்டில் சிக்கினார் முதல்வர் எடப்பட்டி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கியதால் விமான நிலைய வளாகமே பெரும் பரபரப்பில் இருந்தது. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது அவர் லிப்டில் சென்றபோது திடீரென லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றதால் லிப்டில் முதல்வர் பழனிச்சாமி சிக்கினார். இதுகுறித்த தகவல் […]

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு நாள்

பிரபல பாலிவுட் நடிகை நிஹாரிகாவும் தொடர்பில் இருந்ததாக நடிகர் நவாஸூத்தின் சித்திக்கி தனது சுயசரிதை புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் நவாஸூத்தின் சித்திக்கி. மிகவும் திறமையான நடிகர். இவர் சமீபத்தில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், நானும் இந்தி நடிகை நிஹாரிகா சிங்கும் மிஸ் லவ்லி என்ற படத்தில் சேர்ந்து நடித்தோம். ஒரு நாள் அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். […]

இன்றைய ராசிபலன்I 30.10.2017

மேஷம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே ரிஷபம்:நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் […]

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 36ஓ ட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் லாகூர் கடாபி விளையாட்டரங்களில் நேற்று இடம்பெற்றது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடனும் பெரும் […]

சர்க்கரை விலை உயர்வு: ஜி.கே.வாசன் கண்டனம்

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஏழை, எளிய நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கதக்கது. வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.13.50 வில் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். அன்றாடம் […]