தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒரு சேர வணங்கிப் போற்றும் மாவீரர் நாள் இன்று தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படுகின்ற மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் சுடறேற்றி வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரையில் சரியான முறையில் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர முடியாத அவல நிலையை தமிழ் மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர்.
இருப்பினும் கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கிலும் – கிழக்கிலும் துயிலும் இல்லச் சூழல்களை படைத்தரப்பு கண்காணித்துவருவதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கு சுடரேற்றி மக்கள் வணக்கம் செலுத்துவர்.





