Other News

தமிழீழ தேசியத்தலைவரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் இன்று கேக் வெட்டி அவரது 63 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவரது இல்லம் அமைக்கப்பட்டிருந்த வளாகத்துக்குச் சென்ற இளைஞர்கள் தலைவர் பிரபாகரனின் அகவை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் போது பட்டாசுகளும் கொழுத்தப்பட்டது. இதேவேளை இன்று அதிகாலை 12 மணிக்கு யாழ் குடாநாட்டில் பல்வேறு […]

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் புத்தளம் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளால் இன்று(26) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்-தில்அடிய பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் சந்தேகத்திடற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாக சிலர் தெரிவித்ததாகவும்,குறித்த சந்தர்ப்பத்தில் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்கள் தயார்

மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை மையப்படுத்தி இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அருகிலும், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. அந்தவகையில் விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் அலங்கரிப்பு பணிகள் மிக எழுச்சியுடன் காணப்படுகிறது.

மாவீரர் தினத்தை இலக்கு வைத்து இராணுவமா.?

வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும் இன்றைய தினம் வடக்கில் வல்வெட்டித்துறை பகுதியல் புலிக்கொடிக்கு சமாந்தரமாக மாற்றுக் கொடியொன்றை ஏற்றியமை, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியமை குறித்தும் […]

ஊழல் பிரதமர் மோடி

தீவிரவாதத்திற்கு எதிராக போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தது. மும்பை தீவிரவாத தாக்குதலின் 9வது நினைவு தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசும்பொழுது, தீவிரவாதம் பற்றிய விவகாரத்தினை கடந்த 40 வருடங்களாக இந்தியா எழுப்பி வருகிறது என கூறினார். தொடக்கத்தில் இதனை உலக நாடுகள் கருத்தில் எடுத்து கொள்ளவில்லை. ஆனால், […]

துயர் துடைப்பு மையம்

துயர் துடைப்பு மையம் துயர் துடைப்பு மையம் என்று தினமும் ஒலி பரப்பாகின்றதே வானொலியில்……\ இதை எப்போது எங்கே துடைத்து எறிகின்றார்கள் கண் துடைப்பு வித்தை போல் ஆனது இத் திட்டம்…..\ ஆண்டுக்கு ஆண்டு தொடரும் தொடர் கதையாகப் போனது இந்த அவல நிலை….\ வானம் பொழிகின்றது பூமி நிறைந்து வளிகின்றது வெள்ளத்தால் ஆண்டில் ஒரு தடவையாவது பரிதாப நிலையில் குடிசை வாசிகள்……\ பாது காப்பு என்னும் பெயரில் கூட்டிக் […]

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! ஒட்டிய வயிறுடனே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படகோட்டி வலை வீசப் போனவரே …! நடுக் கடலிலே துணைக் கரம் இன்றி துட்டுக்காக தத்தளித்த படி கூடையை நிறப்ப வலை வீசப் போனவரே …! குப்பத்துச் சேவல் கூவிடிச்சு பக்கத்து ராமன் வீடு வந்தாச்சு அள்ளி எடுத்த வலையோடு […]

பாகிஸ்தான் தலைநகரில் பதற்றம் ரப்பர் குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு வந்தனர். இதனால் இஸ்லாமாபாத் முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன. இதன்காரணமாக நேற்று […]

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மாலியில் 2013-ம் ஆண்டில் இருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாலி மக்களை காப்பதிலும், அமைதி நிலவச்செய்வதிலும் அங்குள்ள ஐ.நா. அமைதிப்படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை அங்கு அமைதிப்படை வீரர்கள் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு நைஜர் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ள மெனாகா மற்றும் மோப்தி ஆகிய […]

எகிப்தில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு ஆயுதக்கிடங்குகள் அழிப்பு

எகிப்தில் மசூதி தாக்குதலுக்கு விமானப்படை பதிலடி கொடுக்கும் விதமாக வான்தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் இயங்கிக்கொண்டு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில், அங்கு சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள பீர் அல் அபெத் நகரில் அல் ராவ்டா […]