Other News

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்

இந்த குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருடைய குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழில் சிறக்கும். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். பயங்கள் மறைந்து கவலைகளின்றி காணப்படுவர். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். எதிராக நின்ற போட்டியாளர்கள் படுதோல்வி அடைவர். உடன்பிறந்தோர் அன்புடன் நடந்து கொள்வார்கள். துணிச்சலான காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். சமூகத்தில் நல்ல […]

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம்

இந்த ஆண்டு குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் குடியிருக்கும் வீட்டைவிட்டு சற்று கூடுதல் வசதியான வீடுகளுக்கு மாறுவர். புதிய ஆடைஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரம் […]

எடப்பாடி – தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக?">

எடப்பாடி – தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக?

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, எடப்பாடி-ஓபிஎஸ் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க திட்டம் தீட்டியது. அதற்காகவே, இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு, அதன் பின் அது எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்படியும் அதிமுகவே வெற்றி […]

கோமாளி அமைச்சர்களின் தலைவர் செல்லூர் ராஜூ

தினகரன் ஆதரவாளரான நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அமைச்சர்களை கோமாளி அமைச்சர்கள் எனவும். சில அமைச்சர்கள் வடிவேலுவின் இடத்தை நிரப்புகிறார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். மதவாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைக்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜக மீது திடீரென தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்து தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்திடம் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த நாஞ்சில் […]

முதல்வர் பதவி

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின் டிடிவி தினகரன் ஆட்சியை கைப்பற்றும் மன நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின், கட்சியை தன் வசம் வைத்திருந்த சசிகலா, சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், டிடிவி தினகரணை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்து சென்றார். ஆனால், பல களோபரங்களுக்கு பின் தற்போது ஆட்சி மற்றும் கட்சி இரண்டுமே எடப்பாடி கையில் இருக்கிறது. அதிமுக தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் என்ற […]

தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி டிடிவி தினகரனின் எண்ண ஓட்டங்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். அந்நிலையில், வெற்றி பெற்ற தினகனுக்கு, நேற்று காலை […]

சரக்கு அடிக்கக் கூடாது">

சரக்கு அடிக்கக் கூடாது

நாளை இரவு உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. தமிழகத்திலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதனால், அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகியுள்ளது. எனவே காவல்துறை இரவு […]

இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரை

மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு பணியானது மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார். அத்துடன் இது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும் காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும்.” […]

மகிந்த

ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி

பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறா விட்டால் எங்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்களும் அரசாங்கத்திற்கு எதிராண நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நோக்கம் மக்களிடம் இல்லை. எனவே அரசாங்கத்திற்கு எதிரானதும் ஆதராவனதுமான தெளிவான ஒரு பிளவு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு […]

4 மாடி கட்டிடத்தில் ஆணுறுப்பு படம் வரைந்த நிறுவனம்

நியூயார்க்கில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் பக்கவாட்டில் நீளமான ஆணுறுப்பு படம் ஒன்றை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒரு நிறுவனம் வரைந்தது,. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியதால் வரைந்த 48 மணி நேரத்தில் அதன் மீது பெயிண்ட் அடித்து அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நியூயார்க்கில் உள்ள புரூம் வீதியில் உள்ள கட்டிடத்தில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஓவியர் ஒருவர் கடந்த சில […]