Other News

நீதிமன்ற தீர்ப்பை மீறி வேலை நிறுத்தம்

போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பேருந்துகள் இன்றி பயணத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு […]

பின்வாங்கிய ரஜினி ரசிகர்கள்!

மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க இருந்த ரஜினி ரசிகர்கள், பீட்ட ரஜினிக்கு எழுதிய மிரட்டல் தொனியிலான கடிதத்துக்கு பின்னர், அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விடுபட்ட தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், மதுரை ரசிகர்கள் மத்தியில் பேசும்போது உங்களுக்கு கறி சோறு போட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் […]

காளியை வீட்டில் வைத்து வணக்குவது நல்லதா?

காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும், அவளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன. காளியின் படத்தை பலர் வீட்டில் வைக்கவும் தயங்குவதுண்டு. ஆனால் உண்மையில் உக்ர வடிவில் உள்ள காளியின் படத்தைதான் வீட்டில் வைக்கக்கூடாது. சாந்த வடிவில் இருக்கும் காளியின் படத்தை […]

தையல் நிலை­யத்­துக்கு விச­மி­க­ளால் தீ வைப்பு

யாழ்ப்­பா­ணம் நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் விச­மி­க­ளால் தீ வைத்து எரி­யூட்­டப்­பட்­டது என யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு இடம்­பெற்­றது. நல்­லூ­ரில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரைக் சுட்­டுக்­கொன்ற வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரின் குடும்­பமே இந்­தச் செயலை செய்­தது என தைய­ல­கத்­தின் உரி­மை­யா­ளர் குற்­ற­­­­­­­­­­ஞ்சாட்­­டி­னார். தொடர்­பில் உரி­மை­யா­ளர் தெரி­வித்­த­தா­வது: 2009ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதத்­தி­ல் இ­ருந்து நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் […]

ஆண்டின் தொடக்கத்திலே தொடங்கிய பன்றிக்காய்ச்சல்

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் பன்றிக் காய்ச்சல் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சமீபகாலமாக H1N1 எனும் வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் 3500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து 2018 ஆண்டின் தொடக்கத்திலே, பன்றி காய்ச்சல் பரவி வருவதனால் பொதுமக்கள் நடுக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் […]

இன்றைய ராசிபலன் 05.01.2018

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்:  மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் […]

அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் துரோகிகள் என விமர்சித்த தினகரன் செங்கோட்டையனுக்கு […]

150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும் இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிரகணத்தின் போது […]

ரஜினிகாந்த் ஒரு 420: சீண்டும் சுவாமி!

நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் வழக்கத்தைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை சீண்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகிறார். பலமுறை ரஜினியை மிகவும் கடினமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சுப்பிரமணியன் சுவாமி ரசிக்கவுமில்லை, விரும்பவுமில்லை. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச […]

ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் !

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக ரஜினி கூறியுள்ளார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும், திரைத்துறையிலும் அவருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. அவருக்கு பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி […]