2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசு எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே, இந்தக் கட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரில் […]
Other News
மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்? போன்சேகா
மக்கள் கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வரலாற்றில் சவால்களை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் மக்கள் வழங்கும் எந்த சவாலாக இருந்தாலும் அதனை புறந்தள்ளாது ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார். பொது வேட்பாளர் எண்ணக்கரு ஊடாக எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் இது தனது தனிப்பட்ட கருத்து. அன்று நான் வெற்றி பெற்றிருந்தால், சகல […]
மஹாசோன் பலகாயவுடன் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பு
மஹாசோன் பலகாய எனப்படும் அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் மஹாசோன் பலகாய என்னும் அமைப்பும் செயற்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தொடர்புகளை பேணியுள்ளமை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மஹாசோன் பலகாய என்னும் அமைப்பின் பிரதானியாக அமித் வீரசிங்க என்ற […]
சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்பளின் முறைப்பாடுகளை விசாரணைசெய்ய பொறிமுறை
காணாமல்போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் அடங்கலாக பொதுவான சட்டமுறையற்ற கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய சம்பவங்களை சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சு அவ்வப்போது அறிந்து கொண்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு தனது சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாருக்கு […]
இன்றைய ராசிபலன் 18.03.2018
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள். மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களின் வருகையால் […]
கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு ‘அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , ‘*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்’ […]
ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குக்றிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. மேலும், ஜெயலலிதா […]
கமல்-விஷால் திடீர் சந்திப்பு
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் […]
கடலுக்கடியில் உணவகம்; அசத்தும் நார்வே
நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்று கடற்கரை உணவங்கள். நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம் அமைந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 100 வரை அமர்ந்து உணவருந்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
கிரீன் டீ தெரியும் கிரீன் காபியின் பலன்கள் தெரியுமா !
கிரீன் டீ என்பது பலருக்கும் தெரிந்த பானமாகும். உடல் எடையை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என இதன் பயன்கள் பற்றி பலர் அறிந்திருப்பார்கள். சரி, கிரீன் காபியை பற்றி தெரியுமா? அதன் அற்புத பயன்களை பற்றி கேள்விபட்டதுண்டா? கிரீன் காபி தயாரிக்கப்படும் விதைகளில் சாதா காபி விதையை விட குளோரோஜினிக் ஆசிட் அதிகளவில் அடங்கியுள்ளது. இதனால் இதை பருகுவதில் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன நீரிழிவு நோயைக் […]





