சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் மன்றம் ஒன்றை அமைத்து அதனிடம் கையளியுங்கள. இலங்கையில் மனித உரிமைகள் […]
Other News
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததை நேரில் கண்டேன் : கமலாம்பிகை கந்தசாமி
யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதை நான் கண்டிருக்கின்றேன் என யுத்தத்தின்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அரச மருந்தாளராக பணியாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உபகுழுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கிளிநொச்சி வைத்தியசாலையில், நான் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் […]
வடக்கு ,கிழக்கில்; சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை
இந்திய மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகளை அடுத்து சுகாதார அமைச்சு இது பற்றி கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளைச் […]
இழப்பீடு வழங்கும் பணியகத்தை ஆமைக்கிறது இலங்கை அரசு
யுத்தம், உள்நாட்டு அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குமான பணியகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டதை அடுத்து, இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான யோசனை கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன, மத வேறுபாடும் இன்றி, காவல்துறை, பாதுகாப்புப் படையினரின் குடும்பங்கள் […]
அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணத்தில் அரசாங்கம்
அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து வெளியிட்டிருந்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாதுகாப்புச் சபைக் கூடி பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் அவசரகாலச் சட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் மத்துமபண்டார குறிப்பிட்டிருந்தார். அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை ஆட்சி செய்யும் […]
ரஜினிகாந் எந்த கட்சியின் தலைவர்? – கமல்ஹாசன் கேள்வி
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்தெரிவித்துள்ளார். ரஜினியும், கமல்ஹாசனும் நீண்ட வருட நண்பர்கள். எங்கும், எப்போது, ஒருவரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஒருவரையொருவர் தவறாக விமர்சித்துக் கொள்வதும் இல்லை. அந்நிலையில்தான், நேற்று செய்தியார்களை சந்தித்த கமல்ஹாசனிடம், காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இதில் மட்டுமல்ல. ரஜினி பல விவகாரங்களில் […]
நியூயோர்க் ஐ.நா. தலைமையகம் முன்னால் இலங்கை முஸ்லிம்களுக்காகப் போராட்டம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா வாழ் இலங்கை முஸ்லிம்களும், தமிழர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் பலமான நட்புறவாக மாறியுள்ளது – ஜப்பான் பிரதமர்
சென் பிரன்ஸிஸ்கோ மாநாட்டில் பலப்படுத்தப்பட்ட ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதுடன், அது நம்பிக்கையும் பலமும் மிக்க நட்புறவாக மாறியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார். ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவினால் நேற்றுமுன்தினம் விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. டோக்கியோ நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் […]
வெறுப்புணர்வை தூண்டியோருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் : பிரிட்டன் வலியுறுத்து
இன, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசிடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பெருமளவானோர் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்காளாக செயற்பட்ட அனைவருக்கும் எதிராக […]
ரஷ்யா சென்ற நாமல்
ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எதிர்வரும் 18ஆம திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாமல் ராஜபக்ஷ ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.





