Other News

அப்பாடா தலைவர் வாயை திறந்துவிட்டாரா! ரஜினி இப்போவது பேசினாரே

சில நாட்களுக்கு முன் இமயமலை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவரது போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இமயமலை பயணம் புத்துணர்வு அளிக்கிறது. இனி 16 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வது நடக்கும். புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டு மிராண்டத்தனமானது. ரதயாத்திரையின் போது மத கலவரத்திற்கு […]

சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் இரசிக்கிறது

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை, பெரும்பாலான சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லை. 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போதும் பெருமளவான சிங்களவர்கள் மகிழ்ச்சியுற்றனர். அரேபிய கலாசாரத்தை சில […]

புட்டினுக்கு மைத்திரியும் மஹிந்தவும் வாழ்த்து

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புட்டினின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும. அதன்மூலம் ரஷ்ய மக்கள் தமது இலக்கை அடைந்துகொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, […]

அமுலுக்கு வருகிறது புதிய வரிமுறை

புதிய வரி முறையின் மூலம் நாட்டின் வியாபார சூழலை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் குறித்து நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற பொது விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் பெற்ற புதிய உள்நாட்டு வருவாய் சட்டமானது, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் […]

இலங்கை குறித்த அறிக்கை ஐ.நா.-வில் நிறைவேற்றம்!

இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக […]

கண்டி வன்முறையை கோழைத்தனமானது ரவிநாத் ஆரியசிங்க ஐ.நாவில் கண்டனம்

கண்டியில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையானது, ஜனநாயக மற்றும் பன்முக சமுதாயத்தில் இடமற்ற சிலரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான செயல் என ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் உரிமைகளும், […]

தேசிய கொடி போர்த்தும் அளவுக்கு என்ன செய்தார் ஸ்ரீதேவி? ராஜ்தாக்கரே

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் துபாயில் எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அவருடைய இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர் மேலும் மகாராஷ்டிர அரசு, அவரது உடலுக்கு மூவர்ண தேசிய கொடியை போர்த்தி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியது. […]

சசிகலாவுக்கு பரோல்

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில […]

நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் இன்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமாவளவன்: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: […]

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார். இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, ‘நடராஜனின் மறைவு […]