Other News

ஆன்மிக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை

தனது குருவான பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலம் பாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இன்றைய ராசிபலன் 17.03.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பான நாள். ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை […]

ரஷ்யாவில் வைர மழை பொழிந்த விமானம்!

ரஷ்யாவில் புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்கம் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து சில நொடிகளில் தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சரக்கு விமானம் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான […]

ஏர்செல் 50% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பக்கம்

ஏர்செல் திவால் ஆனதும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் மொபைல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போர்ட் செய்து வருகின்றன. ஏர்செல் போர்ட்டிங் காரணமாக மற்ற நிறுவனங்கள் உற்சாகத்தில் உள்ளன. அந்த வகையில், தமிழ் நாடு மற்றும் சென்னையை சேர்ந்த சுமார் 15 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நெட்வொர்க்-க்கு மாறியுள்ளனர். இந்த தகவலை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. அதாவது, ஏர்செல் நெட்வொர்க்-ல் இருந்து போர்ட் அவுட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களில் சுமார் 50% […]

அமைச்சர் பேசும் பேச்சா இது? வைரல் வீடியோ

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றே பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், […]

தலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா?

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கண்வு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்க கூடாது. வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி உண்டாலும். மல்லாந்து […]

முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்பு!

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், […]

இன்றைய ராசிபலன் 16.03.2018

மேஷம்: யதார்த்தமாகப் பேசி கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். […]

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கைச்சாத்தினைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரேரணை எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் அல்லது 22ஆம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் […]

உணவில் மலட்டுத்தன்மை மாத்திரை உண்மைக்குப்புறம்பான பிரசாரம்

உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞான ரீதியில் இந்தக் கூற்று எந்த விதத்திலும் அடிப்படையற்றது என்றும் கூறியுள்ளனர். இலங்கை வைத்தியர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. இலங்கையின் 134 சிரேஷ்ட மருத்துவ நிபுணர்களின் கையொப்பத்தில் வெளியான அறிக்கை இங்கு வெளிடப்பட்டது. […]