ஒன்ராறியோவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா
ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளாது.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தற்போது ஒன்ராறியோ மாகாணத்தில் 31 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புதிதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள், 40 மற்றும் 60 வயதுடைய இரு பெண்களும் 60 வயது ஆணும் அடங்குகின்றனர்.
கடந்த மார்ச் 2ஆம் திகதி கொலராடோவிலிருந்து 40 வயதுப் பெண் வந்தவர் எனவும், அவர் சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், நேற்று இரவு 60வயதுப் பெண் மார்ச் 2 ஆம் திகதி பிரான்சிலிருந்து கனடாவுக்குத் திரும்பியுள்ளார்.
இவர் மார்ச் 7ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள ஸ்கார்பரோ ஹெல்த் நெற்வேர்க் சேவையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதனை மேற்கொண்டார்.
இதேவேளை, 60 வயது ஆண், கடந்த மார்ச் 3ஆம் திகதி வொஷிங்ரனில் இருந்து கனடாவுக்குத் திரும்பிய நிலையில் மார்ச் 7 அன்று ரொறன்ரோவில் உள்ள நோர்த் யார்க் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதேவேளை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை ரொறன்ரோ சுகாதார அமைச்சு உட்பட கனடா அரசு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்
-
கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!
-
கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்
-
புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!
-
ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்
-
கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு
-
ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
-
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித்
-
கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!
-
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!
-
அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு
-
தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி
-
பதவியை பறிக்கவே முடியாது – சஜித்
-
கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!