ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து போலீஸ் படை மீட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரின் கிழக்கு பகுதியை ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மீட்டது. அதைத் தொடர்ந்து மேற்கு பகுதியையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தங்கள் வசப்படுத்துவதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. […]
உலக செய்திகள்
மூன்று கடற்கொள்ளையர்களை சீனா சோமாலியா அதிகாரிகளிடம் ஒப்படைத்தது
சந்தேகத்திற்கிடமான மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனா கடற்படையைச் சேர்ந்த கப்பலில் இருந்து மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஏப்ரலில் OS35 எனும் துவாலோ கொடியுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை கொள்ளையடிக்க முயன்றதாக மூன்று கடற்கொள்ளையர்களை சீன கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் கொள்ளையர்களின் திருட்டு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2011 ஆம் […]
வடகொரிய அதிபரை கொல்ல அமெரிக்கா-தென்கொரியா சதி
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்கா தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கை கொல்ல சதி […]
மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந்திக்க இருப்பதாக […]
எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமான் மாவட்டத்துக்குட்பட்ட காலி லுக்மான் மற்றும் காலி ஜஹாங்கிர் ஆகிய இடங்களில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி முகாம்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து அந்நாட்டு ராணுவ […]
ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் – எப்.பி.ஐ தலைவர்
அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ அமைப்பும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்த நிலையில், ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் அது பேரழிவாக இருக்கும் என எப்.பி.ஐ தலைவர் பதிலளித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டனர். முன்னர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது ஹிலாரி தனது தனிப்பட்ட வேலைக்காக அரசு இ-மெயிலை […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் அரச பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் வயது முதிர்வின் காரணமாக அரச பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரிட்டன் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத்தின் கணவரான 95 வயது இளவரசர் பிலிப், ஏடின்பெர்க் பிரபுவாக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக அவர் தன்னுடைய அரச பொறுப்பில் இருந்து இந்த கோடைக்காலத்துடன் விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]
சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்க மாட்டோம்: வடகொரியா
அணு ஆயுத சோதனை விவகாரத்தில் வடகொரியா, சீனா இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது. சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அவ்வவ்போது கொண்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க […]
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய கவுரவ விருது வழங்கியுள்ளது. ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக தனது தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அர்னால்டின் சேவையை பாராட்டும் விதமாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இந்த […]
சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் – புதின் அவசர ஆலோசனை
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினும் டெலிபோனில் திடீரென பேசினர். அப்போது சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை நடத்தினார்கள். புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடிக்கடி டெலிபோனில் பேசி உலக நடப்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரும் திடீரென […]





