உலக செய்திகள்

சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி – 20 பேர் காயம்

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியம் உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.58 மணிக்கு இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. பூமி அதிர்ச்சியால் அங்கு இருந்த மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடினார்கள். மரங்களால் செய்யப்பட்ட […]

தென் கொரியா அதிபர் ஆகிறார் மூன் ஜே-இன்: கருத்துக் கணிப்பில் தகவல்

தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி தென் கொரியாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் […]

சோமாலியா ராணுவ தளத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல்: வீரர்கள் பலர் உயிரிழப்பு

சோமாலியாவில் ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய பாணியில் செயல்படும் சோமாலியா அரசாங்கத்தை வீழ்த்த அல்-ஷபாப் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நகர்ப்புறங்களில் ஆதிக்கம் செலுத்திய அல் ஷபாப் தீவிரவாதிகளை ஆப்ரிக்க யூனியன் மற்றும் சோமாலி படைகள் விரட்டியடித்துள்ளன. ஆனால், சிறிய மற்றும் தொலைதூர கிராமப் புறங்களை அவர்களிடம் இருந்து பாதுகாக்க போராடி […]

அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி

அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை (வயது 40) ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். கென்டக்கியில் வசித்து வரும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் ஆளுங்கட்சி […]

சிரியாவில் ரஷிய அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அராஜகம்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி […]

அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்த சீக்கியர் கைது

மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக 19 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த சீக்கியரை கைது செய்துள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குர்முக் சிங். சீக்கிய மதத்தை சேர்ந்த இவருக்கு தற்போது வயது 46. இந்தியாவில் டாக்சி டிரைவராக இருந்த இவர் கடந்த 1998-ம் ஆண்டு மெக்சிகோ நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து எல்லை வழியாக […]

ஆப்கானில் கூடுதலாக 3 ஆயிரம் அமெரிக்க வீரர்கள்: டிரம்ப் புது திட்டம்

தலிபான்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கூடுதலாக அமெரிக்க வீரர்கள் 3 ஆயிரம் பேரை இறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இந்த தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆப்கான் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு உறுதுணையாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்து […]

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், […]

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆப்கானிஸ்தான் தலைவன் கொல்லப்பட்டான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவன் அப்துல் ஹசிப் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் சுமார் ஆயிரம் பேர் தற்கொலைப்படை கூட்டமாக இயங்கி வருகின்றனர். காபுல் நகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி மீது கடந்த மார்ச் மாதத்தில் இவர்கள் நடத்திய தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த […]

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுக்கு ‘தாஸ்’ குண்டு என்று பெயரிடுவதா?: போப் ஆண்டவர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் வீசிய குண்டுக்கு ‘தாஸ் குண்டு’ என அமெரிக்கா பெயர் சூட்டியதற்கு போப் ஆண்டவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் அமைத்து பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு அமெரிக்க விமானப் படையின் போர் விமானம் மிகப்பெரிய 10 டன் எடையுள்ள குண்டு வீசியது. இது அணுகுண்டு அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. ‘ஜிபியூ-43’ என்ற அக்குண்டுக்கு ‘தாஸ் குண்டு’ (மதர் […]