சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் – புதின் அவசர ஆலோசனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினும் டெலிபோனில் திடீரென பேசினர். அப்போது சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை நடத்தினார்கள்.

புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடிக்கடி டெலிபோனில் பேசி உலக நடப்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரும் திடீரென டெலிபோனில் பேசிக் கொண்டனர். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இரு தலைவர்களும் பேசும் போது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஆலோசித்தனர். நீண்ட நாட்களாக உள் நாட்டு போரினால் சிரியா அவதிப்பட்டு வருகிறது. மக்கள் சொல்லெண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே அந்த நாட்டில் நடைபெறும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *