மூன்று கடற்கொள்ளையர்களை சீனா சோமாலியா அதிகாரிகளிடம் ஒப்படைத்தது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சந்தேகத்திற்கிடமான மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சீனா கடற்படையைச் சேர்ந்த கப்பலில் இருந்து மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரலில் OS35 எனும் துவாலோ கொடியுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை கொள்ளையடிக்க முயன்றதாக மூன்று கடற்கொள்ளையர்களை சீன கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் கொள்ளையர்களின் திருட்டு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு சோமாலிய கடற்கொள்ளையர்கள் 237 தாக்குதல்களை சோமாலிய கடற்கரை பகுதியில் நடத்தினர். இதன் மூலம் நூற்றுக்கணக்கானோரை கைது செய்திருந்தனர். மேலும் சர்வதேச அளவில் கடற்கொள்ளையின் மூலம் 700 கோடி டாலர்கள் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *