சிரியாவில் ரஷிய அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அராஜகம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் மற்றும் அங்கு அதிரடி தாக்குதல்களின் மூலம் பலரை கொன்று குவித்து, அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆகியோருக்கு எதிரான வான்வழி தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருகிறது.

இதனால், ரஷியாவை முக்கிய எதிரியாக கருதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷியாவை சேர்ந்த விமானப்படை வீரர்களையும், உயரதிகாரிகளையும் பிணையக்கைதியாக சிறைபிடித்து வைத்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் பிணைகைதிகளில் 30 பேரை அவர்கள் கொன்று குவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஷியாவை சேர்ந்த மேலும் ஒரு விமானப்படை அதிகாரியின் தலையை துண்டித்து கொன்ற வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். பாலைவனத்தின் நடுவில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த பிணைக்கைதி அமர்ந்திருக்கும் காட்சியும், ரஷியாவை சேர்ந்த மற்ற வீரர்கள் உடனடியாக சரணடைந்து விட வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் 12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *