முக்கிய செய்திகள்

Head News

பாதுகாப்பிற்கு மத்தியில் தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று ஆராதனைகள் இடம்பெற்றது. இதேவேளை தற்கொலை தாக்குதலுக்கிலக்கான மூன்று தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிய ஷாந்த செபஸ்தியர் தேவாலயத்திலும் மூன்று வாரங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனை இடம்பெற்றது. இந்த ஆராதனையின் போது குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்தவர்கள், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 12.05.2019

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டு வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் […]

சம்பந்தனுடன் கைகோர்க்கும் மனோ கணேசன்

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எழுச்சிக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் […]

யாழில் வீதியிலிருந்து மீட்கப்பட்ட சின்னஞ்சிறு சிசு…

யாழ். வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அத்தோடு சிசுவின் கை காயங்களுக்கு உள்ளாகியிருந்துள்ளது. […]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும். இதே போன்று பயணிகள் செல்லும் பொழுதும் விமான நிலையத்திற்கு வரும் பொழுதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களை […]

பயங்கரவாதிகளின் குற்றத்தை 22 லட்சம் பேர் மீது திணிக்க வேண்டாம்

இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டில் உள்ள 22 இலட்சம் முஸ்லிம்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பள்ளிவாசல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதாக ஊடகங்களில் காண்பிக்கின்றனர். திகனவில் 30 பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கப்பட்டபோது பள்ளிவாசல்களில் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் அவற்றை எடுத்து யாரின் மீதாவது தாக்குதல்களை […]

மக்களுக்கு 3 நாட்கள் காலக்கெடு

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசே

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 11.05.2019

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் அதிரடிசலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட […]

ஹட்டன் தேவாலய மர்மம் விலகியது…வெளிவரும் உண்மைகள்!

கடந்த மாதம் 07 ஆம் திகதி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஹட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்திற்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன. இந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 07 இளைஞர்கள் இன்று காலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இளைஞர்கள் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு பிரதான பள்ளிவாசலில் […]

கொடூர தாக்குதலுக்கு பின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்ட தேவாலயம்…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று மீண்டும் வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டது. காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.