ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மாஸ்டர்மைன்ட என்று சொல்லப்படுகின்ற சஹ்ரானின் மனைவி கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலிருந்து உயிர்தப்பி அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கும் போதும் இடை.. இடையே காது கேட்காதது போல் நடிப்பதாக கூறப்படுகிறது. சஹ்ரானின் மனைவியான பாத்திமாவிடமிருந்து எந்த தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் காது கேட்கவில்லை என நாடகமாடி […]
முக்கிய செய்திகள்
Head News
IS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள்? அந்தரங்க இரகசியம்!
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று சிக்கியது. 15 ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை போன்ற அமைப்பில், இந்த பயிற்சி முகாம் அமைந்திருந்தது. பயிற்சி முகாமின் முன் பகுதி பண்ணை போன்ற தோற்றமுடையது. தென்னை மற்றும் விவசாய பயிர்கள் நடப்பட்டுள்ளன. ஆடு, கோழி, வான் கோழியென்பன வளர்க்கப்படுகின்றன. சாதாரண பார்வைக்கு அதை பண்ணையென தோன்றும் விதமாக பக்காவாக அமைத்திருக்கிறார்கள். நேற்று பொலிசார் […]
இன்றைய ராசிபலன் 07.05.2019
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் […]
சஹ்ரானின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்
டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைதுசெய்ப்பட்ட நபர் 48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என அடையாளம் காணப்பட்டதுடன் சஹ்ரானின் வாகன சாரதியான அண்மையில் கைதுசெய்யப்பட்ட கபூரின் நெருங்கிய சகாவென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கிளிநொச்சியில் மோப்ப நாயுடன் பாடசாலைகளில் சோதனை!!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் வைத்து கடும் சோதனைகளுக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டன. சோதனைக்கு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!! கிளிநொச்சி முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரம் தரித்து விடப்பட்டிருந்ததால், குழப்பமடைந்த […]
இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் தீவிரவாதி சஹரான் தப்பிவிட்டார்?
சஹரான் ஹாசிம் இந்தியாவுக்கு விமானம் ஊடாக பயணம் மேற்கொண்டமைக்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லையென அதிகாரிகள் குறிப்பிட்ட இராணுவ தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவே தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார். ‘த ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே மகேஸ் சேனநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, […]
பயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்
ரிதிதென்னவில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்று நேற்று காத்தான்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று ரிதிதென்ன பகுதியில் இன்னொரு பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட இந்த பயிற்சி முகாம் 40 ஏக்கரிற்கும் அதிக விஸ்தீரணமுடையது. இந்த காணி உரிமையாளர், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இன்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதலின்போது […]
சஹரான் மனைவியிடம் தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்!!
சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் என்ற சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது […]
இன்றைய ராசிபலன் 06.05.2019
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் […]
பயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம்
அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத்தை அரசியல் […]





