முக்கிய செய்திகள்

Head News

விமலுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு 87 நாட்களுக்குப் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பல முறை பிணை கோரியிருந்த போதிலும் அவருக்கான பிணையை வழங்க நீதிமன்றம் […]

ஆணைக்குழு ரணில்

பிரதமர் எதிர்வரும் 10ம் திகதி யப்பான் விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ம் திகதி யப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதமருடன் இந்த விஜத்தில் பங்குகொள்ளவுள்ளார். 16ம்திகதி வரை யப்பானில் தங்கி இருக்கவுள்ள பிரதமர் இந்த விஜயத்தில் யப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே (Shinzo Abe) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் மேலும் உதவும் என்று யப்பான் அரசாங்கம் […]

மத்திய அரசிடம் அதிகாரம் காணப்படும் தீர்வே வேண்டும்! – ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை

மத்திய அரசின் கரங்களில் அதிகாரம் காணப்படும் அரசியல் தீர்வே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மத்திய அரசின் ஆட்சிப் பீடத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய மகாநாயக்க தேரர்கள் இருவரும், ஜனாதிபதிக்கு 21 விடயங்களைச் சுட்டிக்காட்டி நீண்ட கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையையும் குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “கண்டி தலதா மாளிகைக்கு […]

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, அருட்தந்தை பிராஸ்சிஸிசுடன் 56 முன்னாள் போராளிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதம நிதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காணப்படுவதாக குறிப்பிடும் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அதனை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பிலான தீர்மானமானது வேறு எவரும் கொண்டுவந்த ஒரு தீர்மானமல்ல எனவும், ஸ்ரீலங்காவின் அனுசரணையுடனேயே அது கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று […]

நாடாளுமன்றில் மஹிந்த அணியினரால் அமளிதுமளி; நாளை வரை ஒத்திவைப்பு

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினரது தொடர் இடையூறுகளால் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவாதத்தை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபையில் கொண்டுவந்தது. எனினும், விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் நேரப்பிரச்சினையை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டியதால் சபையில் அமளி ஏற்பட்டது. ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள 52 […]

அரசு பராமுகம்! உறவுகள் கடும் கவலை!! – தொடர்கின்றது நீதி வேண்டி போராட்டம்

காணாமல்போனோரின் உறவுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுத்து வருகின்ற போராட்டங்கள் தீர்வு எதுவும் இல்லாமல் இன்று வியாழக்கிழமையும் தொடர்கின்றன. தேசிய அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தமக்குக் கடும் வேதனையாக உள்ளது என்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக, கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 42 […]

தமிழர் அபிலாஷைகளை வென்றெடுக்க சர்வதேசம் துணை நிற்க வேண்டும்! – ஜேர்மனிய நாடாளுமன்றத் தலைவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

“தமிழ் மக்களின் அபிலாஷைகள் புதிய அரசமைப்பின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நீடித்து நிலைத்து நிற்கும் – எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவற்றை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகம் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.” – இவ்வாறு தன்னைச் சந்தித்த ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் தலைவரிடம் எடுத்துரைத்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். இலங்கை வந்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் […]

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற வகையில், ஐந்து பேருக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தினால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங்கள் தொடக்கம் 19 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2003தொடக்கம் 2010 […]

சிரியாவில் அரசு தரப்பு ராணுவம் நடத்திய வான்வெளி விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் […]